Friday, March 24, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு; இசை இரசிகர்கள் ஆர்ப்பரிப்பு.. காரணம் இதோ!

    இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு; இசை இரசிகர்கள் ஆர்ப்பரிப்பு.. காரணம் இதோ!

    இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இல்லாத கொண்டாட்டங்கள் முழுமையானதாகவே இருக்காது. குறிப்பாக தமிழகத்தில் இவர்கள் இருவருமற்ற கொண்டாட்டங்கள் நிகழ்வது அரிதிலும் அரிது. இப்படியான இருவரும் ஒன்றாக சந்தித்துக்கொள்ளுதல் என்பது எப்போதாவாதுதான் நிகழ்கிறது. இப்படியான நிகழ்தல் ஒவ்வொருமுறை நிகழும்போதும் இந்திய இசை இரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கிவிடுவர். அப்படியாக, இசை இரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஏற்றவாறு இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர். ilayaraja and ar rahman

     ‘துபாய் எக்ஸ்போ ‘ என்ற நிகழ்ச்சி துபாயில் தற்போது மிகவும் கோலாகலமாகவும், அனைவரும் கொண்டாடும்படியும் நிகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக இசையமைப்பாளர்கள் கலந்துக்கொண்டு தங்களின் கச்சேரிகளின் மூலம் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியை மேலும் குதூகலப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், கடந்த சனிக்கிழமை இரவன்று இளையராஜா அவர்களின் இசைக் கச்சேரி துபாய் எக்ஸ்போவில் அரங்கேறியது. இளையராஜாவின் கச்சேரியால் நேரில் நிகழ்ச்சியை கண்டுகளித்தவர்கள் மட்டும் அன்றி நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தவர்களும் வியந்தும் கொண்டாடினர்.

    dubai expo

    அற்புதமான இசைக்கச்சேரிக்குப் பின்னர், இளையராஜா அவர்கள் துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு செல்ல, அங்கு ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவை வரவேற்று ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக் காண்பித்துள்ளார். சுற்றிக்காண்பித்த பின்னர், ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட  புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    ilayaraja and ARR

    மேலும், ஏ.ஆர்.ரஹ்மான்  தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், மேஸ்ட்ரோ இளையராஜாவை எங்களின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் ஒரு அற்புதமான இசைக்கோர்வையை அமைப்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

     

     

    View this post on Instagram

     

    A post shared by ARR (@arrahman)

    இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் உள்ள புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...