Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மகிழ்ச்சியான நாட்களாகவே உள்ளன. வியாபாரத்தில் போதுமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் நோக்கத்தில் அதிக கவனம் தேவை. ஆராய்ந்து செயல்பட்டால் அதற்கான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களின் தேவைகள் நிறைவேறும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

    விருச்சிகம்: 

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் உங்களுக்கு மனம் நிறைவடையக் கூடிய நன்மைகள் நடைபெறும். உயர் பதவிகள் வரும். பொறுப்புகள் கூடும். திருமணக் காரியங்கள் கைக்கூடி வரும். வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றமும் தனலாபமும் கிட்டும். கோபத்தை தவிர்த்து பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்தால் வாழ்க்கை வளம்பெறும். சிலருக்கு நிலம், வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்போதும் நடப்பதை விட சற்று கூடுதலான நன்மைகள் நடைபெறும் நாட்களாகவே உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிகள் பொங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு பிடித்தமான ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிகளில் சிலருக்கு இடமாறுதல்கள் கிடைக்கும். பதற்றம், பயத்தினை தவிர்ப்பதின் மூலம் வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். உங்களின் விடாமுயற்சியின் மூலமாக வெற்றிகளைக் குவிப்பீர்கள். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு கடின உழைப்பினால் வெற்றிகளைக் குவிக்கும் நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. கணவன்-மனைவி உறவில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்பு அதிகரிக்கும். அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தொழிலில் போட்டிகளும் பொறாமைகளும் அதிகமாக காணப்படும். இருப்பினும், அதற்காக நீங்கள் உழைப்பின் மூலம் முயற்சித்தால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் மிகும் நல்ல நாட்களாகவே இருக்கின்றன. தொழிலில் தனலாபம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில காரியங்களில் பொறுமையும் கவனமும் தேவை. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். இதனால் உங்களின் மனதின் உத்வேகமும் ஆற்றலும் அதிகரிக்கும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மையையும் தீமையும் ஒரு சேர நடைபெறக் கூடிய நாட்களாக உள்ளன. குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி சத்தம் கேட்கும். உங்களின் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தொழிலில் தனவரவு இருக்கும். பெற்றோர்களின் சொல் கேட்டு நடப்பது உங்களின் வாழ்க்கைக்கு நல்லது. பொறுப்புடன் செயல்பட்டால் குடும்ப சூழ்நிலை ஓங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும்.

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....