Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்கள் இதோ!

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்கள் இதோ!

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு இனிமையான மற்றும் மன மகிழும் நாட்களாக உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனலாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும் அன்பும் அதிகமாகும். ஆன்மிக வழிபாடு உங்களின் மன அமைதிக்கு வழிவகுக்கும். உறவினர்களின் சுப நிகழிச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அதை சமாளிக்க கூடிய சக்தி உங்களிடம் இருக்கும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாகவே இந்த வார நாட்கள் உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். உயர்பதவி வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு ஏற்படும். உடன்பிறப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள். முடிந்தவரை கோபத்தை தவிர்த்து அமைதியாக  இருப்பதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அதுவாகவே நடக்கும். 

    மிதுனம்: 

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல நாட்களாக உள்ளன. எப்போதும் வரும் லாபத்தைவிட தற்போது அதிகமான லாபம் வரும். திருமணக் காரியங்கள் கைக்கூடி வரும். விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதின் மூலமாக உறவுகள் பலப்படும். அலுவலகத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், அவை சுமூகமாக முடியும். கவலைகளை மறந்து கடவுளை தியானித்தால் எல்லாம் நன்மைகளாகவே நடக்கும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகளும் தீமைகளும் ஒரு சேர நடைபெறும் நாட்களாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் வரலாம். பொறுமையை கடைப்பிடிப்பது மற்றும் வீண் வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகங்களில், மேல் அதிகாரிகளிடம் இருந்து உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். இடையூறுகள் நீங்க ஆஞ்சநேய வழிபாடு செய்யுங்கள். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் உங்களுக்கு குறைவான தீமைகளும் அதிகமான நன்மைகளும் நடைபெறும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. திருமண நிச்சயங்கள் கைக்கூடி வரும். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் உண்டாகி உடனே மறையும். இதனால், உறவில் பலம் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும்போது கவனமுடனும் பொறுப்புடனும் இருப்பது நல்லது. 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் இனிமையான நாட்களாகவே உள்ளன. வேலைச் சுமை அதிகரித்தாலும் அதற்கான ஆதாயங்கள் நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண செலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை சற்று குறைந்து வீட்டின் சூழ்நிலை ஓங்கும். உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் வாழ்வில் நல்ல பயன்களைத் தரும். பிள்ளைகளால் இருந்துவந்த பிரச்சனைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். 

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....