Friday, March 31, 2023
மேலும்
    Homeஜோதிடம்மேஷம் முதல் கன்னி வரையிலான இந்த வாரத்தின் ராசிபலன்கள் உங்களுக்காக, இதோ !

    மேஷம் முதல் கன்னி வரையிலான இந்த வாரத்தின் ராசிபலன்கள் உங்களுக்காக, இதோ !

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல நாட்களாக உள்ளன. இருப்பினும் மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கும். தொழிலில் தனலாபம் அதிகரிக்கும். பெண்கள் செலவுகளை குறைந்து சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு பிடித்தமான நிகழ்வுகள் நடைபெறக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்களுக்கு சிறப்பான பிடித்தமான வேலை கிடைக்கும். வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் உங்களின் விடா முயற்சியின் மூலம் சாதித்து காட்டுவீர்கள். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மன அமைதி நிலைக்கும் நாட்களாக உள்ளன. மிகுந்த போராட்டங்களுக்கு பிறகே அமைதியானது கூடிவரும். கடன் பாக்கிகளை அடைக்க நல்ல நேரம் உருவாகும். அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். பெண்களின் மகிழ்ச்சிக்கு சில நல்ல நிகழ்வுகள் நடைபெறும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் உங்களுக்கான இடையூறுகள் விலகி, நன்மை ஓங்கும் நல்ல நாட்களாக இருக்கின்றன. அலுவலகங்களில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். அதனால், தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முற்படுவீர்கள். பெண்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு எதிர்ப்பார்த்த நல்ல நன்மைகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். வேலை ரீதியாக சில தடைகள் வந்து மறையும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். மேலும் புதிய வகை உபகரணங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர முயல்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். கோபத்தை குறைத்து பொறுமையைக்  கடைபிடிக்க வேண்டிய நாட்களாக உள்ளன. கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆன்மிக வழிபாட்டின் மூலம் அமைதி காண வேண்டிய நாட்கள் இவை. வெளியில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை.

    துலாம் முதல் மீனம் வரையிலான இந்த வாரத்தின் ராசிபலன்கள் உங்களுக்காக, இதோ !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ilayaraja

    13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் இளையராஜா..

    இளையராஜா 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார். இந்திய திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என...