Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்துலாம் முதல் மீனம் வரையிலான இந்த வாரத்தின் ராசிபலன்கள் உங்களுக்காக, இதோ !

    துலாம் முதல் மீனம் வரையிலான இந்த வாரத்தின் ராசிபலன்கள் உங்களுக்காக, இதோ !

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சுமாரான நாட்களாகவே உள்ளன. இருப்பினும் உங்களின் முயற்சியை மட்டும் எப்போதும் கைவிடாது இருப்பது நல்ல பலன்களைத் தரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அதிகமான வாய்ப்புகள் உண்டு. வரவும் செலவுக்கும் ஏற்ற வகையில் வியாபாரம் இருக்கும். பெண்களின் மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். 

    விருச்சகம்: 

    விருச்சக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, மகிழ்ச்சிகள் பொங்கும் இனிதான நாட்களாக உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகங்களில் புதிய பொறுப்பு மற்றும் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மனநிறைவைத் தரும். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, அதிக நன்மையும் சிறிது தீமையும் நடைபெற உள்ளன. தொழில் மற்றும் அலுவலகங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்தோது கவனம் தேவை. தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியம். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. இடைவிடாமல் உழைப்பதால் சோர்வு அதிகமாக இருக்கும். வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக இந்நாட்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு. 

    மகரம்:

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று சுமாரான நாட்களாகவே இருக்கும். இருப்பினும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவும் வந்துச் சேரும். கல்வியில் மாணவர்கள் ஆர்வம் காட்டினால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். அலுவலகங்களில் சிலருக்கு உயர் பதவி வாய்ப்புகள் வரலாம். தாய், தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற சில அலைச்சல்கள் இருக்கலாம். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, திருப்திகரமான நாட்களாக இருக்கும். நீங்கள் எதிர்ப்பார்த்த சில விடயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளால் நீங்கள் பெருமை அடைவீர்கள். சிலருக்கு அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும். நல்லவரவும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். இருப்பினும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் அதையே செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகளும் தீமைகளும் ஒரு சேர நடைபெறும் நாட்களாக உள்ளன. உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் குடும்ப நலத்திலும் கவனம் தேவை. புது வியாபார யுக்திகளைக் கையாள நினைப்பீர்கள். நல்ல நண்பர்களுடன் பழகுவதால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கருத்து வேறுபாடுகளைத்  தவிர்ப்பது நல்லது. 

    மேஷம் முதல் கன்னி வரையிலான இந்த வாரத்தின் ராசிபலன்கள் உங்களுக்காக, இதோ !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....