Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசிபலன்கள் மேஷம் முதல் கன்னி வரை!

    இந்த வார ராசிபலன்கள் மேஷம் முதல் கன்னி வரை!

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் பணவரவு அதிகரிக்கும். உங்கள் மனதில் இருந்து வந்த பிரச்சனைகள், குழப்பங்கள் அனைத்தும் விலகும். உங்களுக்கு என்று சில குறிக்கோள்கள் இருக்கும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி உண்டு. ஆனால் அதை நீங்கள் சுலபமாக சமாளித்துவிடுவீர்கள். விநாயக வழிபாடு செய்யுங்கள் மேலும் நன்மைகள் நடைபெறும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் தீமைகள் இரண்டும் கலந்து நடைபெறும் நாட்களாக உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். உறவுகளின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் காட்டுவீர்கள். கோபத்தில் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சமாதானம் உண்டாகும். தேவையற்ற தொல்லைகளை தவிர்க்க ஓம் நமச்சிவாய மந்திரத்தை மனதில் நிறுத்துங்கள். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. இருப்பினும் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் மிகுந்த கவனம் தேவை. ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் விடா முயற்சியால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். தொழிலில் தனலாபம் அதிகரிக்கும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். தர்மம் எதுவோ அதையே செய்ய முற்படுவீர்கள். மேலும் நன்மைகள் நடைபெற அம்மன் வழிபாடு செய்யுங்கள். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆசி பெற்று மகிழ்வீர்கள். உங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். தன்னம்பிக்கை மூலம் சாதித்து காட்டுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. சிலருக்கு தடங்கல்கள் ஏற்படலாம். யானை முகனை வழிபட்டு வெளியில் சென்றால் தடங்கல்கள் விலகும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கில் நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள தேர்வில் கவனமுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தொழிலில் தனலாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சிகள் பொங்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனிதாக நடைபெற வாய்ப்புகள் உள்ளன. மேலும் நன்மைகள் நடைபெற நாராயண வழிபாடு செய்யுங்கள். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே இந்த வர நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. உங்களுக்கு பிடித்தமான ஆடை, ஆபரணங்களை வாங்கி பயன்படுத்தி மகிழ்வீர்கள். ஆன்மிக வழிபாடு செய்வதில் அதிகம் நாட்டம் காட்டுவீர்கள். கோபங்களைத் தவிர்த்து நல்லெண்ணத்தில் நடந்தால் நன்மைகள் உங்கள் பக்கம் வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனவரவு அதிகரிக்கும் நாட்களாக உள்ளன. குல தெய்வ வழிபாடு மேலும் நன்மையைப் பெற்றுத் தரும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....