Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசிபலன்கள் துலாம் முதல் மீனம் வரை!

    இந்த வார ராசிபலன்கள் துலாம் முதல் மீனம் வரை!

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகளும் தீமைகளும் ஒரு சேர நடைபெறும் நாட்களாக உள்ளன. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் திருப்திகரமான லாபமும் இருக்கும். உங்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இருப்பினும் தேவையற்ற செலவுகளைத்  தவிர்ப்பது நல்லது. உயர் பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்கள் உங்களுடன் இணைவார்கள். பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. முருகன் வழிபாடு செய்யுங்கள் வேல் உங்களைக் காக்கும். 

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. குடும்பத்தில் சுப காரியங்கள் இனிமையாக நடைபெறும். தொழிலில் குறைந்த அளவிலான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் உண்டாகும். ஆடை அணிகலன்களை உங்களுக்கு பிடித்தது போல் வாங்கி அணிந்து மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவி உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. பெருமாள் வழிபாடு மேலும் நன்மையைத் தரும். 

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. நீங்கள் முயற்சிக்கும் காரியங்களில்  கட்டாயம் வெற்றிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நீங்கள் உழைக்கும் அளவிற்கு ஏற்ற பலன்களைப் பார்க்கலாம். வெற்றிவேல் வழிபாடு உங்களுக்கு மேலும் நன்மைகளைப் பெற்றுத் தரும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகளும் சிறிய வகையில் தீமைகளும் நடைபெற வாய்ப்புகள் உண்டு. பணவரவு அதிகரிக்கும் நல்ல நாட்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ வாய்ப்புகள் உண்டு. உங்களின் உயர்வான எண்ணங்கள் உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டுச் செல்லும். சமூக செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். இருப்பினும் உங்கள் தன்னம்பிக்கை செயல்களால் வெற்றியை ருசிப்பீர்கள். மனோ தைரியம் அதிகரிக்க ஆஞ்சநேய வழிபாடு செய்யுங்கள். 

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. உங்களுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி மகிழும் நாட்களாக உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் பதவி வாய்ப்புகள் வரலாம். நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பயணங்களின் போது கவனமுடன் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களைக் கவர புது முறைகளைக் கையாளுவீர்கள். அம்மன் வழிபாடு மேலும் நன்மைகளைத் தரும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மையும் தீமையும் சேர்ந்து நடைபெறும் நாட்கள். தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். பெரியோர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுத்து நடந்தால் நல்ல பலன்களைப் பெறலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனலாபம் அதிகரிக்கும். நேர்மை மற்றும் நீதியின் வழியில் நடந்தால் உயர்ந்த இடங்களுக்கு செல்வீர்கள். சில காரியங்களில் மந்தமாக இருப்பீர்கள். புத்துணர்வும் நற்சிந்தனையும் கூட குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....