Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்192 மீட்டர் ஆழமுள்ள குகைப்பள்ளத்தில் மிகப் பழமையான காடுகள் கண்டுபிடிப்பு!!

    192 மீட்டர் ஆழமுள்ள குகைப்பள்ளத்தில் மிகப் பழமையான காடுகள் கண்டுபிடிப்பு!!

    தெற்கு சீனாவிலுள்ள குவாங்க்சி மாகாணத்திலுள்ள காடுகளில் புதிய குகைப்பள்ளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 192 மீட்டர் ஆழமுள்ள இந்த குகையில் பழமையான காடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காடுகளில் வளர்ந்துள்ள மரங்கள் 40 மீட்டர் உயரமுள்ளவையாக இருக்கின்றன. காடுகளின் தரைப்பகுதி முழுவதும் அடர்த்தியான தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் குகைப் பள்ளங்கள் இருப்பது பொதுவான ஒரு விடயமாகவே இருந்தாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள குகைப்பள்ளத்தின் அளவு பிரம்மிக்கத்தக்கதாய் உள்ளது.

    192 மீட்டர் ஆழமுள்ள இந்த குகைப்பள்ளம், 306 மீட்டர் நீளத்தினையும், 150 மீட்டர் அகலத்தினையும் கொண்டுள்ளது. 5 மில்லியன் மீட்டர் சுற்றளவினைக் கொண்டு மிகப்பெரிய அளவில் விரவிக் கிடக்கின்றது. இந்த பரப்பானது 2,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் பரப்பிற்கு சமம் என்பது கூடுதல் தகவல்.

    சீனாவின் மூத்த பொறியாளர் ஒருவர் இந்த பள்ளத்தினுள் செல்ல மூன்று வழிகள் உள்ளதாகக் கூறியுள்ளார். இந்த பள்ளத்தினுள் உள்ள காடுகள் பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்றும், தரைப்பரப்பில் உள்ள அடர்ந்த தாவரங்கள் ஒருவரது தோள் உயரத்திற்கு வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    குகை ஆராய்ச்சியாளர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக முயற்சித்து 100 மீட்டர்கள் இறங்கி தரைப்பரப்பினை அடைந்துள்ளனர். தங்களது ஆராய்ச்சியினை முடித்துக் கொண்ட அவர்கள் பாதுகாப்பாக அந்த குகையினை விட்டு வெளியேறியுள்ளனர்.

    இந்த வகையான குகைப் பள்ளங்கள் நிலத்தில் ஏற்படும் பிளவினால் உருவாகிறது எனவும் இந்த குகைகளுக்கு வெளிப்புற நீர் ஆதாரங்கள் எதுவும் இருக்காது எனவும் அமெரிக்கவினைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி இணைதளம் ஒன்று கூறியுள்ளது. மேலும், இந்த வகையான குகைப்பள்ளங்கள் சுண்ணாம்புக் கரடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்படும் எனவும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

    தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பள்ளத்தினை சேர்த்து சீனாவில் மொத்தமாக முப்பது குகைப்பள்ளிகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. சீனா மட்டுமல்லாது மெக்ஸிகோ, பப்புவா நியூ கினி  மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கிடைக்கின்றன. 

    தற்போது சீனாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த குகைப்பள்ளத்தினுள் இதுவரை கண்டறியப்படாத உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று சீன ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    எப்போதும் அழகாக இருக்க வேண்டுமா? அப்போ, படியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....