Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மீனவர்கள் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சி மேலும் இவற்றையும் செய்யவும் - அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

    மீனவர்கள் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சி மேலும் இவற்றையும் செய்யவும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

    கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்கடையினரின் இந்த கைதுக்கு தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்களும் தமிழக மீனவர்கள் கைதுக்கு ‘இந்திய இறையாண்மையின் மீது இலங்கை கடற்படை தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை இனியும் வேடிக்கை பார்க்க கூடாது’ என்றார்.

    tn fisherman இந்நிலையில் இன்று ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருவனவற்றை கூறியுள்ளார்.

    fishermen-

    வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்ட  நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 21 பேர் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 21 நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    anbumani ramadoss Election

    மேலும், விடுதலை  செய்யப்பட்ட 21 மீனவர்கள் தவிர, நேற்று முன்நாள் கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் உட்பட மொத்தம் 29 மீனவர்கள்  இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தான் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    “கடந்த பல ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தவும் செய்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...