Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கல்விக் கொள்ளையைத் தடுக்க டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்துமா? அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

    கல்விக் கொள்ளையைத் தடுக்க டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்துமா? அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

    சென்னையில் உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் டி.பி.ஜெயின் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி, பல்வேறு ஏழை மாணவர்களுக்கு கல்வியை போதித்தது. இக்கல்லூரியில் படித்தவர்கள் பலரும், இன்று நல்ல நிலைமையில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இப்படியான சூழலில், பல்வேறு ஊழல் புகார்களில் இக்கல்லூரி சிக்கி வருவதாகவும், உடனே டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வலியுறுத்தியுள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

    சென்னையில் இயங்கி வரும் டி.பி.ஜெயின் கல்லூரி, 1972 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் உன்னதமான நோக்கத்தோடு துவங்கப்பட்டது. கல்லூரிக்கு அரசு நிதியுதவி கிடைத்ததால், மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கிடைத்தது.

    கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக, அடித்தட்டு மக்களுக்கு தரமான கல்வியை வழங்கி வந்த இக்கல்லூரி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. கல்லூரிக்கு கடந்த 20 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. கடந்த 2020-21, 2021-22 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையும் நடத்தப்படவில்லை. கடந்த 4 வருடங்களாக அரசு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணம் ரூ.850-க்கு பதிலாக ரூ.42,000 வசூலித்து, கல்விக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது இக்கல்லூரி.

    பல்கலைக்கழக மானிய குழு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை, வாடகைக்கு விட்டு பணம் வசூலிக்கிறது. கடந்த 6 வருடங்களாக முதல்வரே இல்லாமல், பொறுப்பு முதல்வரைக் கொண்டு கல்லூரியை நடத்தி வருகிறது. கல்லூரியின் நடந்த முறைகேடுகளை அனைவரையும் அறியச் செய்த 11 பேராசிரியர்களை, பணி நீக்கம் செய்திருப்பது உள்ளிட்ட குற்றச் சாட்டுகளுக்கு, கல்லூரி நிர்வாகம் இன்று வரை சரியான விளக்கத்தை அளிக்கவில்லை என்று

    இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மை என்று நிரூபித்தது உயர்கல்வித் துறை. இதன் அடிப்படையில் கல்லூரியை, அரசே ஏற்று ஏன் நடத்தக்கூடாது? என்று கல்லூரி நிர்வாகத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே அறிக்கை அனுப்பியது. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தப்படாததால, சுயநிதிக் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

    இக்கல்லூரியில் 14 வகை பட்டப்படிப்புகளும், 7 வகை பட்ட மேற்படிப்புகளும் உள்ளது. இவை அனைத்துக்கும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் விருப்பத்தின் படி, சுயநிதி கல்லூரியாக மாறி விட்டால், அதிக கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இங்கு இடம் கிடைக்கும்.

    அதனால், இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த, 1976-ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் 14(அ) பிரிவு வகை செய்கிறது. இனியும் தாமதம் செய்யாமல், டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதன் மூலம், அக்கல்லூரியின் பொன்விழா ஆண்டில் புத்துயிரையும், புதிய விடியலையும் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....