Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மண் வெட்ட அனுமதி வழங்காமல், நெடுஞ்சாலைப் பணிகள் எப்படி நடக்கும்? - அன்புமணி இராமதாஸ் பதிவு

    மண் வெட்ட அனுமதி வழங்காமல், நெடுஞ்சாலைப் பணிகள் எப்படி நடக்கும்? – அன்புமணி இராமதாஸ் பதிவு

    தமிழ்நாட்டில் மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும் தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.tamilnadu highway project

    இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பதிவொன்றை பதிந்துள்ளார். அப்பதிவில், நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். 

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்றும், பணிகளை விரைந்து முடிக்க மண் வெட்ட அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றும் அப்பதிவில் அன்புமணி இராமதாஸ் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    anbumani

    மேலும், நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளும் அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்து, அதன் மூலம் தமிழக வளர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ipl

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான...