Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்போருக்கு முன்பே இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும்- அன்புமணி இராமதாஸ்

    போருக்கு முன்பே இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும்- அன்புமணி இராமதாஸ்

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உலகம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது . உக்ரைன் நாட்டு மக்கள் மட்டும் அன்றி பிற நாட்டு மக்களும் உக்ரைனில் பதற்றத்துடனும் பயத்துடனும் இருந்து வருகின்றனர். மக்கள் பலர் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். போர் எப்போது நிறைவு பெரும் என்று தெரியாத சூழலில் பல நாடுகளும் உக்ரைனில் உள்ள தங்களின் குடிமகன்களை தங்கள் நாட்டுக்கே அல்லது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

    army

    இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்கள் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர் என்பதை கூறினார். அதோடு ரஷ்ய விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பெய்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பதையும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தெரியப்படுத்தினார்.

    மேலும், உக்ரைன் போருக்கு முன்பே இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கை சில நாட்களுக்கு முன் தான் தொடங்கியதால் சில நூறு இந்தியர்களை மட்டுமே மீட்க முடிந்தது. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகத்திலிருந்து உதவி கிடைக்கவில்லை என்று தற்போது நிலவும் நிலவரத்தை அன்புமணி இராமதாஸ் தனது பதிவில் கூறியுள்ளார்.

    anbumani ramadoss speech about ukraine indians

    அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவின் இறுதியில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகம் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்றும் மாற்று வழிகளை ஆராய்ந்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....