Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்யாருக்கும் பயனளிக்காத செயலை செய்த அரசு, வெளிச்சம் போட்டு காட்டிய அன்புமணி இராமதாஸ்!

    யாருக்கும் பயனளிக்காத செயலை செய்த அரசு, வெளிச்சம் போட்டு காட்டிய அன்புமணி இராமதாஸ்!

    பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்புக்கான பேச்சுகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை மாநாடு கென்யாவின் தலைநகர் நைரோபியில் நேற்று தொடங்கியது. 

    பிளாஸ்டிக் ஒப்பந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மூன்று வகையான வரைவுகள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன. ருவாண்டா, பெரு ஆகிய நாடுகள் தயாரித்துள்ள  வரைவு முழுமையானதாகவும், உலக நாடுகளை கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வரைவை 70 நாடுகள் ஆதரித்துள்ளன.

    பிளாஸ்டிக் ஒப்பந்தம்இம்மாநாடு குறித்தும், பிளாஸ்டிக் ஒப்பந்தம் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    அப்பதிவில், பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற பிற நாடுகளின்  நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; இது உலக நலனுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    plastic waste

     

    plastic pollution

    மேலும், ‘உலகெங்கும் கடந்த 70 ஆண்டுகளில் 900 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 700 கோடி டன் குப்பையாக நிலத்திலும் நீரிலும் வீசப்பட்டுள்ளது. மீதமுள்ள பிளாஸ்டிக் தீயில் எரிக்கப்பட்டு, கொடிய நச்சுக்காற்றாக மாற்றப்பட்டுள்ளது. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் வெறும் 9 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னாக இருந்த ஆண்டு பிளாஸ்டிக் உற்பத்தி, 2020-ஆம் ஆண்டில் 37 கோடி டன்னாக அதிகரித்து விட்டது. இது 2050-ஆம் ஆண்டில் 100 கோடி டன்னாக பெருகி விடும். அப்போது கடலில் உள்ள மீன்களின் எடையை விட, பிளாஸ்டிக் குப்பையின் எடை அதிகமாக இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது  ஒட்டுமொத்த கடல் வளத்திற்கும் பேரழிவாகி விடும். இதைக் கட்டுப்படுத்தத்  தேவையான அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஒப்பந்தம் உருவாக்கப்படுவது தான் உலகுக்கு பயனளிக்கும்.’ என்ற உண்மையையும் அன்புமணி இராமதாஸ் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    plastic garbage

    மேற்கூறிய உண்மையோடு இந்த இலக்கு எட்டப்பட வேண்டுமானால், ஐ.நா. உருவாக்கும் பிளாஸ்டிக் ஒப்பந்தம் உலக நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து நிலையிலும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. உருவாக்கும் பிளாஸ்டிக் ஒப்பந்தத்தை செயல்படுத்த பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் கழிவு பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    anbumani-ramadoss

    ‘இந்திய அரசு யாருக்கும் பயனளிக்காத வரைவை திரும்பப் பெற்றுக்கொண்டு, ருவாண்டா – பெரு ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மக்கள் நலனிலும் அக்கறையுள்ள அனைவரும் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்து, மத்திய அரசிடம் கடுமையாக வலியுறுத்த வேண்டும்’ எனவும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....