Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்விநியோகிக்கப்படும் ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம்; அன்புமணி இராமதாஸ் கேள்வி!

    விநியோகிக்கப்படும் ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம்; அன்புமணி இராமதாஸ் கேள்வி!

    திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலின் போது, நாங்கள் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்தனர். 

    ஆனால், தேர்தலில் வெற்றியடைந்து அரியணையில் ஏறியப்பின், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை. இதைச்சார்ந்து கேள்விகள் எழும்புகையில் விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற பதில்களின் மூலம் மழுப்புகின்றன. 

    cm form

    சூழல்கள் இப்படியாக இருக்க, தற்போதோ தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும்  விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. 

    இந்நிலையில், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும்  அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    anbumani

    ‘இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை விநியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு  செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப விநியோகத்தை தடுக்க வேண்டும்’ எனவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....