Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பில் ஆளும் அரசு எந்த சமரசத்தையும் செய்யக்கூடாது என அன்புமணி இராமதாஸ் பதிவு!

    தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பில் ஆளும் அரசு எந்த சமரசத்தையும் செய்யக்கூடாது என அன்புமணி இராமதாஸ் பதிவு!

    கூடங்குளம்  மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வண்ணம் உள்ளது. 

    kudankulam nuclear power plant

    இந்நிலையில், பாதாள கட்டமைப்பு குறித்து தமிழக அரசுடன் பேச தேசிய அணுமின்கழகத் தலைவர் புவன் சந்திரபதக் அடுத்த வாரம் சென்னை வருகிறார் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    Kudankulam

    இத்தகவலை அறிந்த பட்டேலை மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூடங்குளம் அணுக்கழிவு பாதாள கட்டமைப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும்; பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது   தான் அவரது பயணத்தின் நோக்கமாகும். இது தொடர்பான அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணியக்கூடாது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்.

    anbumani-ramadossமேலும், கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதாளக் கட்டமைப்பை ஏற்படுத்தினால், அது தென் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை நினைவு கூர்ந்த ராமதாஸ் அவர்கள், அதன் பின்னர்  அணுக்கழிவு கட்டமைப்புக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    “கூடங்குளம் அணு உலையை விட தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முக்கியம் ஆகும். அதில் எந்த சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக்கூடாது.  தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய  எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது” என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....