Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாமக வேட்பாளா் மேயராக வெற்றி பெற்றால் மதுக் கடைகள் அகற்றப்படும்- அன்புமணி ராமதாஸ்!

    பாமக வேட்பாளா் மேயராக வெற்றி பெற்றால் மதுக் கடைகள் அகற்றப்படும்- அன்புமணி ராமதாஸ்!

    வருகிற பத்தொன்பதாம் தேதி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எம்முறையும் இல்லா வண்ணம் இம்முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ளது. 

    anbumani-ramadossஇந்நிலையில், “இப்போது இல்லாவிட்டால், இனி எப்போதும் இல்லை. இதனை நாம் செய்யாவிட்டால், வேறு எவரும் செய்யப்போவது இல்லை. நம்முடைய எதிர்காலம், நமது குழந்தைகளின் எதிர்காலம், எதிர்வரப்போகும் பல தலைமுறைகளின் எதிர்காலம் – இதோ இப்போது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.இதுவே தக்க தருணம். வாருங்கள் மாற்றம் படைப்போம். புதியதோர் நகர்ப்புறத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற கொள்கையை அடிப்படையாய் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் வாக்கு சேகரித்து வருகிறது.

    காஞ்சிபுரத்தில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், மக்களிடம் நேரடியாகத் தொடா்பில் இருப்பவை உள்ளாட்சி மன்றங்கள்தான் எனவும் காஞ்சிபுரத்தில் பாமக வேட்பாளா் மேயராக வெற்றி பெற்றால் முதல் நடவடிக்கையாக மதுக் கடைகள் அகற்றப்படும் எனவும் கூறினார்.

    நீட் தோ்வு தொடா்பாக பொதுவிவாதம் நடத்த தயாராக இருப்பதாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கூறுகின்றன. அவ்வாறு பொது விவாதம் நடத்தினால் அதில் பங்கேற்க நானும் தயாராக இருக்கிறேன். நீட் தோ்வுக்கு காங்கிரஸ், திமுக,அதிமுக ஆகிய கட்சிகளே காரணம் எனவும் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பின் போது பதிவு செய்தார்.

    மதுவை ஒழிக்க வேண்டும் என்றாா் அண்ணா. அதை செயல்படுத்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மறந்துவிட்டன என்பதை நினைவு கூர்ந்தவர், அண்ணா பெயரில் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினாா்கள் ஆனால், எந்த வசதியும் செய்யப்படவில்லை என்பதை கூறினார். நான் மத்திய அமைச்சராக வந்த பிறகு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி மண்டல புற்றுநோய் மையமாக, அதை தரம் உயா்த்தினேன் என்பதையும் அவர் வாக்கு சேகரிப்பின் போது நினைவு கூர்ந்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....