Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தென்னிந்திய படங்களால் ஒதுங்கியதா அமிர்கான் படம்? - அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

    தென்னிந்திய படங்களால் ஒதுங்கியதா அமிர்கான் படம்? – அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

    வருகின்ற ஏப்ரல் மாதம் இந்திய திரையுலக இரசிகர்களுக்கு மிக முக்கியமான மாதமாக கருதப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்று பார்த்தால், தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரலுக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்னும் தேதியை அதிகாரப்பூர்வமாய் குறிப்பிடாத நிலையில் ஏப்ரலுக்கு வெளியாவது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது,

    beast

    அடுத்தபடியாபக, கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் கே.ஜி.எஃப் – சாப்டர் 1. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை இத்திரைப்படம் பெற்றது. தமிழ், தெலுங்கு என பான் இந்திய திரைப்படமாக வெளியானது, கே.ஜி.எஃப் முதல் பாகம்! இந்நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் சாப்டர் வெளியாக உள்ளது. 

    kgf 2

    அமிர்கான் நடிப்பில் உருவாகி வரும்  ‘லால் சிங் சத்தா’ திரைப்படமும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகாது என்றும், ஆகஸ்ட் 11-ம் தேதி ‘லால் சிங் சத்தா’ படம் வெளியாகும் என்றும் அமீர்கான் அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    laal singh chaddha

    சமீபகாலமாக தென்னிந்திய படங்கள், பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்து வருவதால், ‘லால் சிங் சத்தா‘ தள்ளி வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்த நிலையில், திரைப்படத்தை இன்னும் முழுமையாக எடுத்து முடிக்க முடியாததே திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போவதற்கு காரணம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    forest gump

    டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump)  திரைப்படத்தின் அதிகார மறு உருவாக்கம்தான், ‘லால் சிங் சத்தா‘. உலக அளவில் இப்படத்திற்கு என்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றும் பலராலும் விரும்பி பார்க்கப்படும் திரைப்படம்தான், ஃபாரஸ்ட் கம்ப். இப்படியான திரைப்படத்தை ‘லால் சிங் சத்தா’ திரைப்படமாக எப்படி எடுத்துள்ளனர் என்பதை பார்க்கவே பலர் ஆவலில் இருக்கின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    fssai announcement

    தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை திரும்பப்பெற்ற உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம்

    தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் திரும்பப்பெற்றது.  தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தை கட்டாயம் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு தர...