Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்த அமெரிக்கா : மரியுபோலில் நீடிக்கும் சண்டை

    உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்த அமெரிக்கா : மரியுபோலில் நீடிக்கும் சண்டை

    ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போர்தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரைத் தொடங்கிய ரஷ்யா, உக்ரைன் போரில் இருந்து பின்வாங்கதால் தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்தன. இந்த வரிசையில் தற்பொழுது நார்வே நாடும் இணைந்துள்ளது.

    பல தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    தற்பொழுது பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னிய மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ரஷ்யாவை போரை நிறுத்திச் சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 

    ஆனாலும், ரஷ்யா தொடர்ந்து போர்நடத்தி வருவதால் உக்ரைன் பொதுமக்கள் அதன் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். சமீபத்தில் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் நடந்தே உக்ரைன் எல்லையைக் கடந்து இந்தியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிடமிருந்து கச்சாஎண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன. ஆனாலும், ஜெர்மனி ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து வாங்கி வந்தது. இந்நிலையில் ஜெர்மனியும் வாங்குவதை குறைத்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது ரஷ்யா.

    இந்நிலையில், இந்தியா கடந்த வாரம் 30 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணையை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியைச் சார்ந்து இருப்பதால் மேலும் இறக்குமதி செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. 

    இந்நிலையில் தங்களுக்கு அமெரிக்கா கூடுதல் இராணுவ உதவிகளைச் செய்துள்ளதாக கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதனால் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்த அவர் அமெரிக்கா என்ன ஆயுதங்களை வழங்கியது என கூற மறுத்து விட்டார். அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் மற்றும் ரஷ்யாவுக்கு கூடுதல் தகவல்களை வழங்க விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரில் வெற்றிபெற முடியாத நிலை வரும்போது ரஷ்யா ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜோ பைடன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள போலந்து நாட்டுக்கு விரயவிருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. 

    இன்றயதினப்போரில், 300 ரஷ்யப் போர்வீரர்கள் போர்நடத்த மறுப்பு தெரிவித்து திரும்பியுள்ளதாகவும், இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே ரஷ்யப் படைகளுக்கு போர் செய்ய ஆயுதங்கள் இருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....