Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்உலகம்சாட்டிலைட் இணைய சேவையில் புதிய திருப்பம்: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக ‌அமேசான் "புராஜக்ட் குயிப்பர்"!

  சாட்டிலைட் இணைய சேவையில் புதிய திருப்பம்: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக ‌அமேசான் “புராஜக்ட் குயிப்பர்”!

  வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், இணைய சேவை என்பது அத்தியாவசியமான ஒன்று. பல நிறுவனங்கள், இணைய சேவை வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் நிர்வகிக்கும் SpaceX-இன் ஸ்டார்லிங் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்குப் போட்டியாக, புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது அமேசான் நிறுவனம்.

  இத்திட்டத்தின் மூலமாக எல்லோருக்கும் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமேசான் தொடங்கியுள்ள புதிய திட்டத்திற்கு பெயர் “புராஜெக்ட் குயிப்பர்”.

  கடந்த ஏப்ரல் மாதத்தில், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அமேசான் நிறுவனம். வணிக விண்வெளித் துறை வரலாற்றில், பெரிய ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது. குயிப்பர் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு, 3 விதமான வெவ்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜினுடன், யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் ஐரோப்பாவின் Arianespace மற்றும் Lockheed Martin ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படவுள்ளது.

  எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸுக்குச் சொந்தமான, ஸ்டார் லிங்க் நெட்வொர்க் சேவைக்குப் போட்டியாக, புராஜெக்ட் குயிப்பர் இருக்கும் என்று CNBC விண்வெளி செய்தியாளர் மைக்கேல் ஷீட்ஸ், தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அமேசான், 2019 ஆம் ஆண்டில் முதன்முதலாக புராஜெக்ட் குயிப்பரை வெளிப்படுத்தியது.

  SpaceX இன் ஸ்டார்லிங்க் நெட்வொர்க், ஏற்கனவே ஏறக்குறைய 2,000 செயற்கைக்கோள்களை புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி உள்ளது. மேலும், 2 லட்சத்து 50 ஆயிரம் சந்தாதாரர்களுக்கு சாட்டிலைட் இணைய சேவையை அளித்து வருகிறது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங் திட்டத்தில், மொத்தமாக 12,000 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த, ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது, இவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

  அமேசான் ஒரு செயற்கைக்கோளை கூட இண்டெர்நெட் சேவைக்காக விண்ணில் செலுத்தவில்லை. எனினும், இந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவை வழங்கும் சந்தையில், அமேசான் நிறுவனம் நிரந்தர போட்டியாக இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

  செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சந்தை, பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஒன்றாகும். இந்தத் துறையில் உள்ள எவரும், ஒரு நிறுவனம் தான் எல்லா விதமான சூழல்களையும் தாங்கி நிற்கும் என்று நம்புவதில்லை என்று மூத்த ஆய்வாளர் காலேப் தெரிவித்துள்ளார்.

  மேலும் அவர் கூறுகையில், குறைந்தது 2 அல்லது அதற்கு அதிகமான நிறுவனங்கள், விண்ணில் செயற்க்கைக்கோள்கள் ஏவுவதைக் காண்பதற்கு நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இது, இணைய இணைப்பை மட்டுமே நம்பியிருக்கும் வணிகம் அல்லது நிறுவனத்திற்கும் சிறந்த சேவையை வழங்கும் முயற்சியாகும் என்று கூறியுள்ளார்.

  உலக மக்கள் தொகையில் 37% பேர் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தவில்லை. அதில், 96% விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் தரவுகள் தெரிவிக்கிறது.

  சமையல் எண்ணெய் விலை உயரப்போகிறதா? மக்களே உஷார்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....