Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஅசத்தலான கிராமிய சமையல் - தெரியனுமா உங்களுக்கு? வந்து பாருங்க

    அசத்தலான கிராமிய சமையல் – தெரியனுமா உங்களுக்கு? வந்து பாருங்க

    கிராமத்துல என்னோட அம்மாச்சி வீட்டுக்கு போன எவ்ளோ ருசியா சமச்சு தருவாங்க தெரியுமா?

    எங்க அம்மா கை பக்குவம் யாருக்குமே வராது.

    ச்சே.. அதெல்லோ ஒரு காலம்.. இனிமே அந்த நினைவுகளெல்லா திரும்பி வருமா?அந்த ருசியான சாப்பாடெல்லா கிடைக்குமா? இப்படி ஏக்கப் பெருமூச்சோட பேசுறவங்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம். அதுக்காக நாம எப்ப தாத்தா-அம்மாச்சி வீட்டுக்கு போவோ.. அம்மா கையாள எப்ப சாப்பிடுவோம் அப்டில்லா எதிர்பார்த்து, காலங்கள கடத்திட்டு இருக்க முடியாது .

    வாங்க அதே அம்மா -அம்மாச்சி கை பக்குவத்துல நீங்களே செஞ்சு சாப்பிடுற மாதிரியான ஒரு கிராமத்து சமயல நா செய்றது எப்படின்னு சொல்றே .

    செய்முறை விளக்கத்துக்குள்ள போகலாமா ?

    பொங்கனம்:

    dosa

    தேவையானவை:

    மீதமான இட்லி மாவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – 2 டீஸ்பூன், ரவை – 2 டீஸ்பூன், தண்ணீர், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, மிகுந்து போன இட்லி மாவில் கொட்டி நன்கு கலக்குங்கள். பிறகு மைதா மாவு, தயிர், ரவை ஆகியவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கி, கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், கரண்டியில் மாவை எடுத்து, ஓரளவுக்கு சின்னதாக ஊற்றுங்கள். எண்ணெய் விட்டு சுட்டெடுங்கள். தோசையின் நடுப்பக்கம் கெட்டியாகவும், அதன் ஓரங்கள் மொறுமொறுவென்றும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்… பொங்கனம் ரெடி.
    காலையில் பொங்கனத்தை சாப்பிட்டு கொள்ளலாம். ஒருவேளை மதியமும் இதையே கொண்டு செல்ல விருப்பமாக இருந்தால், ஒரு பொங்கனத்தை வைத்து, அதன் மீது தோசை மிளகாய்ப்பொடியை நல்லெண்ணெய் கலந்து தடவிவிடுங்கள்.

    இப்படி பொடி தடவிய தோசையின் மீது மற்றுமொரு தோசையை வைத்துவிடுங்கள். இறுதியாக வைக்கும் தோசையின் மீது கண்டிப்பாக நல்லெண்ணெயில் கலந்த பொடியை தடவ வேண்டும். மதியத்துக்கு அற்புதமாக இருக்கும் இந்த பொங்கனம்.

    மாப்பிள்ளை சொதி :

    தேவையானவை:

    பாசிப்பருப்பு – 100 கிராம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக் கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், சின்ன வெங்காயம் – 12, தேங்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 8 பல், பச்சை மிளகாய் – 6, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

    செய்முறை:

    சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும். தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.

    மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி. இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங் காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி.. உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    அவ்வளவுதாங்க திருமணமாகி புது மாப்பிள்ள மறுவீட்டுக்கு வரும் போது இத செஞ்சு பரிமாறுவாங்க . இதனை இடியாப்பத்துக்கு ஊத்தி சாப்புடலா ,சாதத்துலையு போட்டு சாப்புடலா, ரொம்பவே அருமையா இருக்கு .

    வட்லாப்பம் :

    தேவையான பொருட்கள் :

    10 முட்டை ,50 கிராம் முந்திரி,25 கிராம் பொட்டுக்கடலை,1 கப் திக் தேய்ங்காய் பால்(டின்),1/4 கப் பொடித்த சர்க்கரை,தேவையான அளவு ஏலக்காய் தூள் .

    செய்முறை :

    10 முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கால் கிலோ சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    50 கிராம் முந்திரி மற்றும் 25 கிராம் பொட்டுக்கடலையை சிறிதளவு தண்ணீர் விட்டு தனியாக மிக்சியில் வெண்ணை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும் .

    ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்திருந்த முட்டை – சர்க்கரை கலவை மற்றும் முந்திரி பொட்டுக்கடலை கலவை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ளவும். அதன் மேலாக ஒரு டம்ளர் தேங்காய் பால், 50 கிராம் நெய்யை ஊற்றவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும் .

    இட்லி சட்டியில் தனியாக அரை லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் வடலாப்பம் கலவையை மூடப்பட்ட தனி பாத்திரத்தில் எடுத்து, இட்லி சட்டியில் வைத்து வேக விடவும். அரை மணி நேரம் வேகவிட்டு பிறகு எடுத்தால் சுவையான வட்லாப்பம் ரெடி .

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....