Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அட்சய திருதியை உண்மையில் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

    அட்சய திருதியை உண்மையில் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

    ‘அட்சய திருதியை’ என்றதும் நகை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் அட்சய திருதியை என்பது நகை வாங்குவதற்கு மட்டுமல்ல. வேறு சிலவற்றையும் இன்றைய நாளில் நாம் வாங்கலாம். அவைகள் என்னென்னவென்று காணலாம் வாருங்கள்!

    ‘அட்சயா’ என்றால் சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்று பொருள்படும். அப்படி என்றால் வாழ்வில் குறையாத செல்வங்கள் அனைத்தையும் அந்நாளில் தொடங்குவது வழக்கம். ஆனால் நமக்கு தெரிந்தது என்னவோ நகை மட்டும் தான்! ஆனால் அந்நாளில் சுப காரியங்கள் அனைத்தையும் தொடங்கலாம். முக்கியமாக வீடு, நிலம் வாங்குதல், கட்டடம் கட்டுதல் போன்றவைகளை தொடங்கலாம். 

    இது மட்டுமல்ல! வீட்டில் குறையாத செல்வங்களான சமையல் அறையில் இடம்பெறும் முக்கிய பொருட்களான அரிசி, உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை தான் முதலில் குறைவில்லாமல் வாங்க வேண்டும் என்பது முன்னோர் கருத்து. முன்னோர்களின் கருத்துப்படி, அட்சய திருநாளில் சுபகாரியங்கள் தொடங்கினால் அவை அனைத்தும் தொடர்ந்து நீண்ட நாட்கள் நடைபெறும் என கூறுகின்றனர். 

    • தமிழ் மாதமான சித்திரை வளர்ப்பிறையான, அமாவாசை மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 
    • இந்நாளில் தான் பிரம்மன், உலகத்தை கிருதயுகத்தில் தோற்றுவித்தார் என கூறப்படுகிறது. 
    • காக்கும் கடவுளான விஷ்ணுவால் கிருதயுகம் தோற்றுவிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. 
    • இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் பரசுராமர் இந்நாளில் தான் பிறந்தார் எனப்படுகிறது. 
    • புனித நதியான கங்கை இந்நன்னாளில் தான் பூமிக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது. 
    • சமணர்களைப் பொறுத்தவரையில், தீர்த்தங்கரர்களுள் ஒருவரான ரிஷபதேவரின் நினைவாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 
    • திருமகள் திருமாலின் மனதில் இடம் பிடித்த நாள் இந்நாள் என்று கூறப்படுகிறது. இதனால் தான் அட்சய திருநாளில், லட்சுமியை மற்றும் வழிபடாமல் பெருமாளையும் அதிகம் வணங்குவர். 
    • இதே நாளில் தான் மாகாபாரதத்தில், பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது அட்சய பாத்திரத்தை பெற்றனர் என்று கூறப்படுகிறது. 
    • மேலும் பாஞ்சாலிக்கு கிருஷ்ணர், அட்சய என்று சொல்லி சேலையை தொடர்ந்து கொடுத்த தினம் தான், அட்சய திருதியை என்று கூறப்படுகிறது. 

    பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சுப காரியங்களுக்காகவும் நல்ல தொடக்கத்திற்காகவும் இந்நாள், சிறந்த நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க; பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சுவாரஸ்யங்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....