Wednesday, May 17, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நாளை நன்னாள், நாளை கொண்டாட்ட நாள், நாளை வலிமை நாள்! அஜித்மகுமார் இரசிகர்கள் உற்சாகம்!

  நாளை நன்னாள், நாளை கொண்டாட்ட நாள், நாளை வலிமை நாள்! அஜித்மகுமார் இரசிகர்கள் உற்சாகம்!

  தற்போது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் வலிமை என்றால் அது மிகையாகாது. நாளை வெளியாகவிருக்கும் வலிமை திரைப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு என்பது அளவிடக்கூடிய வகையில் இல்லை. ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்று கேள்வி எழவும் வாய்பில்லை காரணம், வலிமை திரைப்படத்தின் கதாநாயகன் அஜித்குமார். இவர்தான் இந்த திரைப்படத்தின் மீது தற்போது எழும்பியிருக்கும் எதிர்பார்ப்பின் ஆதி!valimai அஜித்குமார், தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை. தல தல என்று அஜித்குமார் அவர்களை அன்புடன் அழைக்கும் ரசிகர்கள் ஏராளம். பெரிய ரசிக பட்டாளத்தை தன் பின் வைத்திருக்க கூடிய அஜித்குமார் அவர்களின் திரைப்படம் இறுதியாய் திரையரங்கில் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. 

  நேர்கொண்ட பார்வை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. அதன் பின்பு அஜித்குமார் அவர்களின் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. நேர்கொண்ட பார்வை திரைப்படமும் முழு நீள அஜித்குமார் திரைப்படம் இல்லை.

  ajith

  பல ரசிகர்களும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ஒரு தருணம்தான் நாளை நிகழவிருக்கிறது. அஜித்குமார் அவர்களை திரையரங்குகளில் காணும் நன்னாள் நாளை அவரின் ரசிகர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

  பலர் கூறுவதைப்போல் வலிமை திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது இன்று கடந்த சில நாட்களில் ஏற்பட்டவை அல்ல. அவை வலிமை படத்தினை பற்றிய அறிவிப்பு வெளிவந்த முதலே ஆரம்பித்தன. இதற்கு ஆதாரமாக பல நிகழ்வுகள் அரங்கேறின.

  ajith

  குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சில மாதங்கள் முன்பு வரை ‘வீ வான்ட் வலிமை அப்டேட்’ என்று அஜித் ரசிகர்கள் கேட்காத இடங்கள் இல்லை எனலாம். கிரிக்கெட் மைதானம், அரசியல்வாதிகள் வாக்கு சேகரித்த இடமென பல பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்க்கான அப்டேட் கேட்டு கையில் பலகைகளை, போஸ்டர்களை ஏந்தினர். இதெல்லாம் நிகழ முக்கிய காரணம் வலிமை திரைப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்புதான்.

  valimai

  இப்படியான  எதிர்பார்ப்புகளை தன்னிடம் வைத்துள்ள வலிமை திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாகாமல் தள்ளிச்சென்று தள்ளிச்சென்று இறுதியாய் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படி நாளை கோலாகலமாய் வலிமை திரைப்படம் வெளியாக இருக்கிறது.

  valimai

  வெளியாவதற்கு முன்பே முன்பதிவுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியும், பலரது சாதனைகளை முறியடித்தும் வருகிறது வலிமை. பல திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வருகின்ற ஞாயிற்று கிழமை வரை ஹவுஸ் ஃபுல் என்ற நிலையைத்தான் நிகழ்த்தியுள்ளது.

  வலிமை திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே போஸ்டர்கள், பாடல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், ட்ரைலர்கள், முன்னோட்டங்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் வலிமை திரைப்படமும் ரசிகர்களை கவரவும், அஜித்குமார் இரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பை போக்கும் வகையில் வலிமை திரைப்படம் சிறப்பாக அமையவும் தினவாசல் சார்பாக வாழ்த்துகள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....