Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்24 ஆம் தேதி வலிமை ரிலீஸ்; கெத்துக்காட்டி வரும் நடிகர் அஜித்குமார்!

    24 ஆம் தேதி வலிமை ரிலீஸ்; கெத்துக்காட்டி வரும் நடிகர் அஜித்குமார்!

    தமிழ் திரையுலகின் மிக முக்கிய மற்றும் உச்ச நடிகர்களில் ஒருவர், அஜித்குமார். அஜித்குமார் அவர்கள் நடிப்பில் வரும் நாளை மறுநாள் அதாவது வருகிற 24 ஆம் தேதி வெளியாகவிருக்க கூடிய திரைப்படம்தான், வலிமை! வலிமை திரைப்படம் அஜித்குமார் இரசிகர்களின் பல நாள் காத்திருப்பு!valimai 24

    ஒவ்வொரு முறையும் வலிமை திரைக்கு வருவதாக அறிவிக்கப்படும் போதும், அஜித்குமார் அவர்களின் இரசிகர்கள் குதூகலத்திற்கு உள்ளாகி விடுவர். பின்னர் கொரோனா காரணங்கள் வர வலிமை திரைப்படத்தின்வெளியீடு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு விடும். குதூகலத்திற்கு உள்ளான அஜித்குமார் இரசிகர்கள் வாட தொடங்கி விடுவர்.

    ஆனால் இம்முறை வாடுதல் என்றே நிகழ்வுக்கே துளியும் இடமில்லா வண்ணம் அஜித்குமார் இரசிகர்களிடத்து குதூகலம் மட்டுமே நிகழும் என்று வலிமை திரைப்படத்திற்கு நேரும் புரோமஷன் பணிகள் தெரிவிக்கின்றன. வெறுமனே புரோமஷன்கள் மட்டும் அன்றி வலிமை திரைப்படமும் இரசிகர்களை குதூகலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

    வருகிற 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் வலிமை திரைப்படத்திற்க்கான முன்பதிவுகள் திரையரங்குகளில் தொடங்கி மிகவும் மும்முரமாக நடைப்பெற்று முடிவடைந்துவிட்டது. ஆம்! ஏறத்தாழ பல திரையரங்களுகளில் வலிமை திரைப்படத்திற்க்கான முதல் நாள் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. இதோடு இல்லாமல் பல திரையரங்குக உரிமையாளர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரையிலுமே வலிமை திரைப்படத்திற்க்கான டிக்கெட்டுகள் நன்கு விற்றுத்தீர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    valimai ajith

    சமூக வலைதளங்களில் வலிமை திரைப்பட முன்பதிவு குறித்து வரும் கருத்துகள் அஜித்குமார் அவர்களின் கெத்தை தொடர்ந்து நிறுபித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் சமீபத்தில் திரையரங்கு ஒன்று வெளியிட்டுள்ள காணொளியில் வலிமை திரைப்பட முன்பதிவுக்கு ரசிகர்கள் ஓடி வருவது போன்ற காட்சி வைரல் ஆகி வருகிறது.

    நேற்று கன்னடத்தில் வலிமை திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பல கன்னட திரையுலக பிரபலங்களும் வருகை தந்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கிலும் வலிமை திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...