Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சீறிப்பாய்ந்த வலிமை திரைப்பட வசூல்! இவ்வளவு வேகத்தில் இத்தனை கோடியா?

    சீறிப்பாய்ந்த வலிமை திரைப்பட வசூல்! இவ்வளவு வேகத்தில் இத்தனை கோடியா?

    அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து பலரையும் தொடர்ந்து கவர்ந்த வண்ணம் உள்ள திரைப்படம்தான், வலிமை. வலிமை திரைப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றித்த் திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்து உள்ளார். 

    valimaiமிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய வலிமை திரைப்படம், கடந்த 24 ஆம் தேதி வெளியானது. அஜித்குமார் இரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே வலிமை திரைப்படத்தை வரவேற்றனர். முதல் காட்சி முடிந்ததும் வலிமை திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் வரத்தொடங்கின. திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் அஜித்குமார் இரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் திருப்தியையே கொடுத்தது.

    valimaiவலிமை திரைப்படத்தை பல அஜித் இரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் பார்த்து தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர். அஜித்குமார் அவர்களை இரண்டரை வருடங்கள் கழித்து திரையில் பார்த்த இரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக இருந்ததை நம்மால் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.

    valimai

    கலவையான விமர்சனங்களை பெற்றதாக கூறினாலும் வலிமை திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு துளியும் குறையவில்லை. அதனின் பலனாக வலிமை திரைப்படம் மூன்றே நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளது. வலிமை திரைப்படம் ஏற்கனவே இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே தமிழகத்தில் அதிக முதல்நாள் வசூலை ஈட்டி சாதனைப்புரிந்தது. பல மாதங்களுக்கு பிறகு வந்த அஜித்குமார் திரைப்படம் இப்படியான சாதனைகளை புரிவது அஜித்குமார் இரசிகர்களுக்கு மட்டும் அல்லாது பலருக்கு ஆனந்தத்தை தந்துள்ளது. இன்று வரை வலிமை திரைப்படம் 180 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

    இதையும் படிங்க; ‘போய் சொல்டா, நாங்கதான் டாப்புனு’ பிரம்மிக்க வைத்த வலிமை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....