Wednesday, March 22, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நடிகர் அஜித்குமார் செய்வது இவ்வளவுதான்!

    எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நடிகர் அஜித்குமார் செய்வது இவ்வளவுதான்!

    தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர்தான், அஜித்குமார். தற்போது எளிதாக அனைவரும் அஜித்குமார் அவர்களை உச்ச நடிகர் என்று எளிதில் கூறி விடுகிறோம். ஆனால் இந்த திரையுலகின் உச்சம் என்ற நிலையை அடைவதற்கு அஜித்குமார் உழைத்த உழைப்பு என்பது அபாரம். சினிமாவில் மட்டுமல்ல பல துறையிலும் ஒரு முறை உழைத்துவிட்டால் போதாது துறையில் இருக்கும் வரை உழைத்துதான் ஆக வேண்டும். வெற்றிகள் குவிந்த பிறகு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த கடின உழைப்பை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறார், அஜித்குமார். valimai வலிமை 

    அதற்கு சான்றாய் இறுதியாய் வெளிவந்த வலிமை திரைப்படத்தையே கூறலாம். வலிமை திரைப்படத்தில் நிகழ்ந்த சண்டைக்காட்சிகளின் வீரியத்தை நம்மால் நன்கு உணர முடியும். ஆம்! அத்தகைய சண்டைக்காட்சிகளில் உச்ச நடிகராக மாறியப்பின்பும் பங்கேற்பது என்பதே தமிழ் திரையுலகில் பெரிய விடயம்தான். 

    valimai

    வலிமை திரைப்படத்தின் மேக்கிங் காணொளியில் படப்படிப்பின்போது அஜித்குமாருக்கு நேர்ந்த விபத்தையும் அதிலிருந்து அவர் மீளுவதும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். இப்படியான உணர்ச்சிகரத்தின் சாயலில்தான் அஜித்குமார் அவர்களின் முப்பது ஆண்டுகால திரையுலக பயணமும் இருக்கும். 

    எதிர்மறை விமர்சனங்கள் 

    இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த அஜித்குமார் அவர்களின் வலிமை திரைப்படத்திற்கு தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களே வந்தன. அஜித்குமாரை நோக்கியும் பல கேலிகளும் எதிர்மறை விமர்சனங்களும் வந்தன, வந்துக்கொண்டிருக்கின்றன.

    இப்படியான சூழலின்தான், நடிகர் அஜித்குமார் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா கடந்த வருடம் அஜித்குமார் கூறிய ஒன்றை நினைவு கூர்ந்து பழைய பதிவு ஒன்றை ரீ-ட்விட் செய்துள்ளார். 

    ரசிகர்கள் நெகிழ்ச்சி 

    ajithkumar

     

    அந்த பதிவில், ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் என மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள் என்றும் நான் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து சீரான முறையில் வரும் விமர்சனங்களையும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என அஜித்குமார் தெரிவித்திருப்பார். மேலும், வாழு வாழ விடு! எப்போதும் உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பேன்! என்றும் அப்பதிவில் அஜித்குமார் தெரிவித்திருந்தார். 

    இந்த பதிவை தற்போது  அஜித்குமார் அவர்களின் ரசிகர்களும் ரீ-ட்விட் செய்து வருகின்றனர். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் வாழு வாழ விடு என்று கூறிவிட்டு அன்பை ரசிகர்களுக்கு தந்துவிட்டு தனது அடுத்த படத்திற்கான உழைப்பை தொடரும் அஜித்குமார் குறித்து அவரது ரசிகர்கள் நெகிழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...