Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..

    அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..

    நடிகர் விஜய், அஜித்குமாரை சந்தித்து அவரது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

    தென்னிந்திய நடிகர்களின் முக்கியமான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை பி.சுப்ரமணியம். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த பி.சுப்ரமணியம் இன்று காலை தனது 85-ஆவது வயதில் காலமானார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா பிரபலங்களும், அஜித் ரசிகர்களும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், திரைப்பிரபலங்களில் சிலர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில், முன்னணி நடிகர் விஜய், அஜித்குமாரை சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, ஓபிஎஸ் போன்றோர் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால்- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....