Sunday, March 26, 2023
மேலும்
    Homeதொழில்நுட்பம்அதிரடியாய் விலை குறைந்த செட்-ஆப் பாக்ஸ் நிறுவனம் : ஓடிடி ஆப்களும் இலவசம் !

    அதிரடியாய் விலை குறைந்த செட்-ஆப் பாக்ஸ் நிறுவனம் : ஓடிடி ஆப்களும் இலவசம் !

    சரவெடியாய் தன்னுடைய செட்-ஆப் பாக்ஸுகளுக்கு விலையை குறைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்தியாவின் முன்னணி ஆப்களையும் இலவசமாக வழங்க முன்வந்திருக்கிறது. 

    இந்தியாவின் முன்னனி சிம் கார்டு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செட்ஆப் பாக்ஸுகளை வெளியிட்டது. அப்பொழுது, ரூபாய் 3999க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே விலைக்கு அதில் எக்ஸ்ட்ரீம் ஸ்டிக்குகளும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தன.

    தன்னுடைய இணையப்பக்கத்தில் செட்-ஆப் பாக்ஸ்களின் விலையை அறிவித்து வந்த ஏர்டெல் நிறுவனம், அதன் விலையை 3000த்திலிருந்து 2000 ஆக குறைத்தது. இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலம், நம்முடைய சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை புதிய யுக டிடிஎச் ஆக மாற்றலாம். இதன் செயல்பாடுகள் அப்படியே அமேசான் ஃபயர் உபகாரணகளைப் போலவே செயல்படும். இதன் மூலம் எளிதாக நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை நேரடியாக ஆன்லைனில் பார்த்து மகிழலாம். 

    இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செட்-ஆப் பாக்ஸ், ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மூலமாக இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டார் மூலமாக 5000க்கும் மேலான செயலிகளை பயன்படுத்த முடியும் மற்றும் இதில் டிடிஎச் செயற்பாட்டோடு ஸ்ட்ரீமிங் செயல்பாட்டுகளையும் செய்ய முடியும். இதற்கு தேவைப்படுவதெல்லம் வைபை இணைப்போ அல்லது மொபைல் ஹாட்-ஸ்போட்டோ தான். கொடுக்கும் இணையத்தின் வேகத்தைப் பொறுத்து விடியோக்களின் தரம் அமையும். 2000 ரூபாயில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செட்-ஆப் பாக்ஸ், வெளிப்புற யூனிட், ஆண்டெனா, ரிமோட் மற்றும் டெலிவரி அதனோடு நிறுவல் பணிகளும் செய்து தரப்படும். இதற்கான இலவச இணைப்பாக இந்த செட்-ஆப் பாக்ஸோடு மூன்று மாத இலவச சந்தாவும் வழங்கப்படும். 

    தற்பொழுது, ஏர்டெல் நிறுவனம் அதன் விலையான 2499 ரூபாயில் இருந்து 499 ரூபாயாகக் குறைத்துள்ளது. மேலும், இது புதிதாக வாங்கும் பயனாளர்களுக்கு மட்டுமே பொருத்தும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஏர்டெல் செட்-ஆப் பாக்சில் அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகியவை இலவசமாக வருமென்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு காலவரையறுக்கப்பட்ட சலுகையே ஆகும். 

    இப்பொழுது நீங்கள் இதனை ஆர்டர் செய்ய நினைத்தால், ஏர்டெல்லின் இணையத்தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதனோடு மூன்று மாதம் இலவசமாக அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், சோனி லைவ், எரோஸ் நவ் ஆகியவையும் பிற செயலிகளின் ஒரு வருட இணைப்பும் இலவசமாக கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...