Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக வழக்கு இன்று விசாரணை

    ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக வழக்கு இன்று விசாரணை

    ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேசமயம், அரசியல் கட்சிகள் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

    இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

    இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப்பதிவாக இருப்பதாகவும், இந்த ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக பயன்படுத்தக்கூடும் என சி.வி.சண்முகம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது.

    காதலர் தினம் கொண்டாட சென்ற ஜோடி பலி – கோவாவில் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....