Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மீண்டும் அதிகரிக்கும் தொற்று! ஊரடங்கில் முடங்கும் மக்கள்!

    மீண்டும் அதிகரிக்கும் தொற்று! ஊரடங்கில் முடங்கும் மக்கள்!

    2019 ஆம் ஆண்டு சீனாவில் ஆரம்பித்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதனால் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பொருளாதார வீழ்ச்சியில் உலகமே தலைக் கீழாய்ப் போனது. ஒன்று இரண்டு மூன்று என கொரானாவின் அலைகள் வந்துக் கொண்டே இருந்தன. உருமாறிய கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா தொற்றுகள் அடுத்தடுத்து வந்து மக்களை அதிகம் பாதிப்புக்குளாக்கியது. 

    இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்ட நாடான சீனாவில் மீண்டும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகின்றது. சீன நாட்டின் மிகவும் முக்கிய மற்றும் பெரும் நகரமான ஷாங்காயில் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பொதுப் போக்குவரத்துக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டது ஷாங்காய் நகர். இதன் காரணமாக தொற்று வேகமாக பரவும் என்பதால் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அத்தியாவசியப் பொருள்களைத் தவிர மற்ற கடைகளும் அலுவலகங்களும் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சீனாவின் நான்காவது பெரும் அலையாக மாற  வாய்ப்பு இருப்பதால் அந்த நகருக்கு மட்டும் இவ்விதமான ஊரடங்கை பின்பற்றும் படிஅந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

    சீனாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் 87 ஆக உள்ளது. 50 வயதுக்கும் மேற்பட்டோர் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பது மேலும் தீவிரத்தைக் காட்டும் எனத் தெரிகிறது. 

    இந்தியாவில் இப்போது தான் மூன்றாம் அலையான  ஓமிக்ரான் தொற்று குறைந்து வரும் நிலையில் பன்னாட்டு விமான சேவைக்கு அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்த தொற்று பரவலின் காரணமாக மீண்டும் உலக நாடுகளுக்கு பரவி விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

    மேலும் சீனாவின் ஷாங்காய் நகர் மிகப் பெரிய தொழில் வர்த்தகம் கொண்ட நகரம் என்பதால் இந்த முடக்கம் காரணமாக பொருளாதரத்தில் சிறிது இறக்கம் ஏற்படும் எனக் கணித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் சிறு தொழில் மற்றும் சிறிய தொழில் வர்த்தகங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என கருதுகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    thoothukudi sathankulam

    சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை...