Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு

    தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு

    திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 2021 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற அரங்கில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அதிமுகவினரை கைது செய்வது குறித்தும், சனநாயக படுகொலையில் திமுக ஈடுபடுவதாகவும், அண்மையில் நடந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சோதனைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 

    நிதிநிலை அறிக்கை தாக்கல் நடைபெற்று வருவதால் சபாநாயகர், எடப்பாடி பழனிச்சாமியை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வெளிநடப்புக்கு இடையேயும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். 

    மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யம் முன்பே கூடிய அதிமுக எம் எல் ஏ க்கள் அப்போதே வெளிநடப்பு குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. வெளிநடப்பு முடிந்த பிறகு, மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒன்றுக் கூடி உள்ளே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    weather

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள...