Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சுவரொட்டியில் சண்டை போட்டுக்கொள்ளும் தி.மு.க - அ.தி.மு.கவினர் : மோதல் வெடிக்கும் அபாயம் !

    சுவரொட்டியில் சண்டை போட்டுக்கொள்ளும் தி.மு.க – அ.தி.மு.கவினர் : மோதல் வெடிக்கும் அபாயம் !

    திருமழிசை பேரூராட்சியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள எட்டு பெருசா? ஏழு பெருசா? என்ற சுவரொட்டியினால், திமுக மற்றும் அதிமுக தரப்பினரிடையே பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது.

    நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திருமழிசை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக முறையே தலா 6 வார்டுகளிலும், மதிமுக, பாமக மற்றும் சுயேச்சை தலா 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற திருமழிசை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக வாக்கெடுப்பில் திமுகவின் சார்பாக நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வடிவேல் என்பவரும், அதிமுக சார்பாக ஏழாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் என்பவரும் போட்டியிட்டனர்.

    Mk Satalin and Edappadi Palanisamy

    திருமழிசை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்ட மறைமுக வாக்கெடுப்பில், திமுக 7 ஓட்டுகளும், அதிமுக 6 ஓட்டுகளும் பெற்றன. 2 ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. முடிவாக, திமுக வேட்பாளர் வடிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை சிறிதும் எதிர்பாராத அதிமுகவினர் நாங்கள் 8 பேர் வாக்களித்து உள்ள நிலையில் எப்படி 2 ஓட்டுகள் செல்லாமல் போகும் என வாக்குவாதம் செய்தனர். மேலும், திருமழிசை பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் ரவி கண்ணியகமாக நடக்கவில்லை என்றும் அவரே அதிமுகவினருக்கு போன் செய்து திமுகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என கூறியதாகவும், இல்லை என்றால் தேர்தல் அலுவலராகிய தான் பார்த்துக்கொள்கிறேன் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினர்.

    இத்தோடு மட்டுமல்லாமல் பேரூராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். உடனே, ஆவடி துணை மேயர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அதிமுக தொண்டர்களைச் சமாதானப்படுத்தினர். அப்பொழுது அங்கு வந்த முன்னாள் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் எம்.எல்.ஏ மணிமாறன் தலைமையில் தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அல்பிஜான் வர்கீசிடம் மனு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக அறிவித்தார். 

    ADMK's Conteoversial Poster

    புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சித் தலைவர் தன்னுடைய பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில் அதிமுகவினர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ஏழு பெருசா ? எட்டு பெருசா ? என்று எழுதி  ஒட்டி உள்ளனர். திமுகவினரை சீண்டும் வகையில் உள்ள இந்த சுவரொட்டியால் இரு தரப்புகளுக்கிடையே பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகள் இவ்வாறு சுவரொட்டி மோதலில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....