Tuesday, March 19, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என கிண்டல் அடித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ?...

  இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என கிண்டல் அடித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ? ஏன் ? யாரை ?

  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலினை இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி என்று கலாய்த்துள்ளார். 

  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது சென்னையில் உள்ள ராயபுரத்தில் 49வது வாக்குச்சாவடியில் கள்ளஓட்டு போட்டதாகக் கூறி திமுக தொண்டர் ஒருவரை அரைநிர்வாணமாக்கித் தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சில அதிமுக தொண்டர்களின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து  பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். தன்னை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவர் அளித்திருந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஜாமினும் வழங்கப்பட்டது. ஆனால், அவரின்மேல் நில அபகரிப்பு வழக்கு உட்பட மேலும் மூன்று வழக்குகள் போடப்பட்டதால் அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால்  அவருக்கு மூன்று வழக்குகளிலும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. மேலும், அவர் இரண்டு வாரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் முறையே திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

  அதன்படி அவரும் சென்ற திங்கள் கிழமை கையெழுத்திட்டார். புதன்கிழமையான நேற்று கையெழுத்திட வந்திருந்த போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதில் கூறினார். 

  திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் என்ற முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர் நீதிமன்றம் எனக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கவில்லை என கூறினார். மேலும், திமுக அரசு கழக முன்னோடிகளின் மீதும் முன்னாள் அமைச்சர்களின் மீதும் பொய்குற்றச்சாட்டுகளையும் பொய்வழக்குகளையும் பதிவு செய்து வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். ரெய்டு என்ற பெயரில் நகை, பணம் என எதையும் கைப்பற்றாமல் பொய்யாக அறிக்கை விடுகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். இப்படி செய்வதில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை மறந்து விட்டதாகவும், மக்களுக்கு நலப்பணிகள் செய்வதை மறந்து விட்டதாகவும் கூறினார். 

  இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறுகிறார்களே என்று கேட்ட கேள்விக்கு, இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி இதுதான் எனக்கூறி தனக்கே உரிய பாணியில் நக்கலாகப் பதில் கூறினார்.  விரைவில் வரும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....