Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி 66 அப்டேட்டுகள் இதோ! பக்கா குடும்ப திரைப்படமாம்!

    தளபதி 66 அப்டேட்டுகள் இதோ! பக்கா குடும்ப திரைப்படமாம்!

    தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் இவரை செல்லமாக தளபதி என்று அழைப்பர்!

    இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்தது, பீஸ்ட் (Beast) திரைபடம். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், முக்கிய வேடத்தில் செல்வராகவனும் நடித்து இருந்தனர்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்த இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போது தளபதி அவர்களின் அடுத்த படமான “தளபதி 66” பற்றய சில அப்டேட்டுகளை பார்க்கலாம் வாருங்கள்.

    இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு “தளபதி 66” என்ற பெயரை இப்போது வைத்து உள்ளார்கள்.

    1. “தளபதி 66” படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு புகழ் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்து உள்ளார்.

    2. இப்படைத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

    3. தில் ராஜு அவர்கள் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார். அவர் திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தால் வருகிற தீபாவளி பண்டிகைக்கு படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.

    4. இப்படத்தில் 12பி புகழ் ஷாமும் இணைந்து உள்ளார். நடிகர் சரத்துக்குமார் அவர்களும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர்கள் இருவரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறன்றனர். ஷாம் விஜய்க்கு அண்ணன் யாகவும் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும் நடிக்க உள்ளனர் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

    5. இவர்களுடன் யோகி பாபு மற்றும் பிரகாஷ் ராஜ் அவர்களும் இணைந்து உள்ளனர்.

    6. “தளபதி 66” படத்திற்கு தமன் இசை அமைக்க உள்ளார்.

    7. சென்னை மற்றும் ஹைதாராபாத் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    8. “தளபதி 66” ஒரு குடும்ப படம். இதில் ரொமான்ஸ், அக்ஷன், காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் விஜய் ரசிகர்கள் விரும்பும் படி அமைக்கப்படும் என்று இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    இதையும் படிங்க; உச்சத்தில் கோடை வெயிலின் தாக்கம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....