Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவந்த விஜய் திரைப்படத்தின் அப்டேட் - வெறித்தனமாய் இணையத்தை கலக்கும் ரசிகர்கள்!

    வெளிவந்த விஜய் திரைப்படத்தின் அப்டேட் – வெறித்தனமாய் இணையத்தை கலக்கும் ரசிகர்கள்!

    பீஸ்ட் 

    தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்க கூடிய திரைப்படம்தான், பீஸ்ட் . நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பீஸ்ட்  திரைப்படத்தின் வெளியீட்டு தேதியே இன்னும் அதிகாரபூர்வமாய் அறிவிக்கப்படாத நிலையில் தளபதி விஜய் அவர்களின் அடுத்த திரைப்படம் குறித்த உரையாடல்கள் அதிக வேகமாய் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

    beast

    தளபதி 66

    தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக உருவாக இருக்கிறது விஜய் அவர்களின் அடுத்த திரைப்படம். இத்திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்குவதாகவும், தில் ராஜு அவர்கள் தயாரிப்பதாகவும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தன. இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    actor vijay latest movie thalapathy 66 update

    தளபதி 66 திரைப்படம் குறித்து  இயக்குநர் வம்சி அவர்கள் தான் பங்குபெற்ற ஒரு நேர்க்காணலில் தளபதி 66 எமொஷனல் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய் அவர்கள் இப்படி ஒரு கதையை கடந்த இருபது வருடங்களில் கேட்டதே இல்லை என்று  ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இப்படியாக திரைப்படத்தை பற்றிய பேச்சுகள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருந்தது. 

    தளபதி 66 அப்டேட்

    rashmika

    இந்நிலையில், தற்சமயம் திரைப்படத்தின் கதாநாயகி குறித்தும், திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குதல் குறித்த பேச்சும் தற்போது தீயாய் பரவி வருகிறது. இதுவரை வந்த தகவல்களின்படி ராஷ்மிகா மந்தனா தளபதி 66 திரைப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  அதேப்போல் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்த இரு தகவல்களால் சமூக வலைத்தளம் முழுவதும் தளபதி 66 என்ற ஹேஷ்டெகுகளால் நிரம்பி வழிகிறது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னமே இப்படியென்றால் இனி தளபதி 66 திரைப்படம் குறித்து வரும் ஒவ்வொரு அப்டேட்டுக்கும்  சமூக வலைத்தளம் மிரளப்போகிறது என்பது உறுதிதான் போலும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....