Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'தனுஷ் உண்மையில் தன்னை முழுவதாய் ஒப்புக்கொடுத்து நடித்தாரா? ' - மாறன் திரைப்பார்வை!

    ‘தனுஷ் உண்மையில் தன்னை முழுவதாய் ஒப்புக்கொடுத்து நடித்தாரா? ‘ – மாறன் திரைப்பார்வை!

    தனுஷ் கதாநாயகனாக நடிக்க, மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான், மாறன். ஓடிடி வெளியிடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மாறன் திரைப்படம் வெளிவந்துள்ளது. 

    முன்கதை மற்றும் கதைச் சுருக்கம் 

    நேர்மையான பத்திரிக்கையாளராக இருக்கும் கதாப்பாத்திரத்துக்கும் அவரை சார்ந்தோருக்கும் நிகழும் இன்னல்கள்தான் மாறன் திரைப்படத்தின் சுருக்க கதை. மாறனின் தந்தை நேர்மையான பத்திரிக்கையாளராக இருக்க, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டமைக்காக கொல்லப்படுகிறார். அதேநாளில் அதே சமயத்தில் மாறனிற்கு தங்கை பிறக்க பிரசவத்தில் மாறனின் அம்மாவும் இறந்து போகிறார். இப்படியாகத்தான் திரைப்படம் ஆரம்பிக்கிறது. மாறன் தன் தங்கையை வளர்க்கிறான். அதற்கு அவரின் மாமா துணை புரிகிறார். 

    maaran

    மாறன், அரசியலில் நிகழும் ஒரு முக்கிய பித்தலாட்ட நிகழ்வை தன் பத்திரிக்கை மூலம் வெளியுலகிற்கு சொல்ல, அதனால் மாறனுக்கு நேர்ந்த இன்னல்களும், நேர்ந்த இன்னல்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதுமாய்தான் மாறன் திரைப்படம் நகர்கிறது. 

    அலசல் 

    maaran

    கதைக்குள் செல்லலாம் என்றால் புதுமை என்று சொல்வதற்கும் சுவாரஸ்ய விறுவிறுப்பு என்று சொல்வதற்கும் வியப்பதற்கும் ஒன்றுமில்லை. நேர்மை என்று கூறி கூறி கதைக்குள் நேர்மையை ஆணித்தனமாய் வீரியத்தன்மையுடன் சொல்வதுப்போல் மாறன் கதாப்பாத்திரத்திற்கு ஒரு காட்சியாவது அமையப்பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் புதிய கதாப்பாத்திரம் ஒன்று கதைக்குள் வர திரைப்படம் கொஞ்சம் சூடுப்பிடிப்பதாய் தோன்றினாலும் அவையும் புஸ்வானமாகிப் போனது. 

    துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் திரைப்படமா இது என்ற கேள்வி திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையிலே தோன்றிவிடுகிறது. 

    மாறன் திரைப்படத்தில் கவர்வதாக சொன்னால் தனுஷ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இடையிலேயே நிகழும் அண்ணன் தங்கை சுட்டித்தனங்களையும் பாசங்களையும் சொல்லலாம். அவையும் சில இடங்களில் அதிகமாய் மிகைப்படுத்த பட்டதைப்போல தெரியுமளவிற்கு காட்சிகள் வலுவற்று காணப்படுகிறது. புலனாய்வு பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் மாறன் கதாப்பாத்திரமானது புலனாய்வு சார்ந்த காட்சிகளில் அதிகம் இல்லாதது ஏனென்று புரியவில்லை.

    மாறன்

    மாளவிகா மோகனனிற்கு மாஸ்டர் திரைப்படத்தை போன்றே மாறனிலும் குறைந்த அளவிலான காதாப்பாத்திரம்தான். அவற்றிலும் பல இடங்களில் மாளவிகா மோகன இன்னும் நடிக்க பழக வேண்டும் என்ற பிம்பத்தை தந்துவிடுகிறார். சமுத்திரகனியின் கதாப்பாத்திர வடிவமைப்பும் பெரியதாய் எடுபடவில்லை.  திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் கதாப்பாத்திரத்தை தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் தந்ததாக தெரியவில்லை. 

    கவர்தல் 

    சிட்டுக்குருவி பாடலும், அண்ணனின் தாலாட்டு பாடலும்தான் கதைக்கு தேவையாக கதையை நகர்த்த உதவியாக அமைந்துள்ளது. பின்னனி இசையிலும் பெரிய கவர்தலை ஏற்படுத்தவில்லை என்றாலும், சிறிய அளவிலான கவர்தல் நிகழ்கிறது. மாறன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    maaran

    தனுஷ் உண்மையில் தன்னை முழுவதாய் ஒப்புக்கொடுத்துதான் இப்படத்தில் நடித்தாரா என்ற கேள்வி திரைப்படம் முடிகையில் நமக்குள் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தன் முழு நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தினாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே? ஒன்று மட்டும் நிச்சயம் தனுஷ் அவர்களுக்கு தற்போது பெரிய அளவிலான வெற்றி திரைப்படம் ஒன்று தேவைப்படுகிறது. அவை விரைவில் அமைய தினவாசல் சார்பாக வாழ்த்துகள்! 

    டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மாறன் திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பார்க்க விரும்புவோர் பார்க்கலாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....