Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமெட்ரோ முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை; தில்லியில் அதிர்ச்சி!

    மெட்ரோ முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை; தில்லியில் அதிர்ச்சி!

    தில்லியில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர், இன்று மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சத்தீஸ்கர் மாநிலம் டர்க் நகரைச் சேர்ந்தவர் அஜய் லக்ஷ்மன் பகலே. இவர் ஐஐடி கான்பூரில் படித்து, டிஆர்டிஓவில் 4 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்பு கெயில் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணியாற்றி வந்த அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்பதவியில் இருந்து விலகினார். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

    இந்நிலையில், அஜய் லக்ஷ்மன் பகலே தில்லியில் உள்ள மயூர் விஹார் பேஸ் 1 மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மெட்ரோ ரயிலின் முன்பு பாய்ந்தார். உடனே மெட்ரோ சேவை அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை மெட்ரோ ரயில் பாதையில் இருந்து வெளியே எடுத்தனர். 

    பிறகு, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதன்பின்பு அஜய் லக்ஷ்மன் பகலேவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....