Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்பார்க்க கட்டுமஸ்தாக இருந்தாலும் இவை குழந்தை மாதிரி : டாபர்மேன் வகை நாய்கள் ஒரு சிறப்பு...

    பார்க்க கட்டுமஸ்தாக இருந்தாலும் இவை குழந்தை மாதிரி : டாபர்மேன் வகை நாய்கள் ஒரு சிறப்பு பார்வை

    எழுந்து நின்றால் கம்பீரத்தோற்றம், முறைத்துப் பார்த்தால் குத்திவிடும் பார்வை என இந்தியத் தோட்டங்களிலும் வீடுகளிலும் காவலுக்கு நிற்கும் பயில்வான் நாய்தான் டாபர்மேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் இந்த வகை நாய்களுக்கு டாபர்மேன் பின்ஞ்சர் என்று பெயர். ஆனாலும், இந்த டாபர்மேன்களின் பிறப்பிடம் ஜெர்மனி ஆகும். 

    இந்த வகை நாயினங்களை முதன்முதலாக ஜெர்மனியைச் சேர்ந்த லூயிஸ் டாபர்மேன் என்ற வரி வசூலிக்கும் நபர்தான் 1890ஆம் ஆண்டு இனக்கலப்பு செய்து உருவாக்கினார். 

    டாபர்மேன் வகை நாய்களின் உடலமைப்பு இயல்பான அளவில் சதுர வடிவில் இருக்கும். நன்கு கட்டமைக்கப்பட்ட தசைகள் நிறைந்த சக்திவாய்ந்த உடலைமைப்புடன் காணப்படும். இது மிக இலகுவாகவும் மற்றும் வேகமாகவும் செயல்பட ஏதுவாக இருக்கும். இதன் உடலமைப்பை பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும், நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். 

    ஆண் நாய்களின் உயரம் 26 முதல் 28 இன்ஞ்சுகளாகவும், பெண் நாய்களின் உயரம் 24 முதல் 26  இன்ஞ்சுகளாகவும் இருக்கும். உரிமையாளர்களின் மார்புமீது கால்வைத்து எழுந்து நின்ற நிலையில் ஆண் நாய்கள் 68 முதல் 72 சென்டிமீட்டர் உயரமும், பெண்நாய்கள் 63 முதல் 68 சென்டிமீட்டர் உயரமும் இருக்கும். 

    இந்த வகை நாய்களின் முகம் பக்கவாட்டில் நின்று பார்த்தாலும், நேரடியாக நின்று பார்த்தாலும் நன்கு நீளமாகமும் மேற்புறம் தட்டையாகவும் காணப்படும். இவற்றின் கண்கள் பாதாம் பருப்பின் வடிவில் கூர்மையான துடிப்புமிக்க பார்வையுடன் காணப்படும். 

    இந்த வகை நாய்களில் பாரம்பரிய இனம் கருப்பு நிறத்தில் மட்டுமே காணப்படும். வயிற்றுப்பகுதி, கால்களின் உள்புறம் மற்றும் வாலின் உள்பகுதிகளில் பழுப்பு நிறம் காணப்படும். இதுபோக சிவப்பு மற்றும் கருநீல நிறங்களிலும் இவ்வகை நாய்கள் காணப்படுகின்றன. இதன் குட்டிகள் நன்கு கரிய நிறத்தில் காணப்படும். பெரும்பாலும் இந்த வகை நாய்களில் அடர்கருப்பு நிறங்களே விரும்பி வளர்க்கப்படுகின்றன. 

    பெரும்பாலும் இவற்றின் காதுப்பகுதியானது கூர்மையான வடிவில் மேற்புறம் நோக்கி எழுந்து நின்ற நிலையிலேயே இருக்கும். இவற்றின் உதட்டுப்பகுதி தாடைக்கு மிக நெருக்கத்தில் அமைந்து காணப்படும். இவற்றின் தாடைகள் மிகவும் கடினமானவை மற்றும் சக்தி வாய்ந்தவை. பயங்கர மோப்பசக்தி வாய்ந்த இவற்றின் மூக்குப்பகுதி கருப்புவகைக்கு கருப்பு நிறத்திலும், சிவப்புவகையில் அடர்பழுப்பு நிறத்திலும் மற்றும் கருநீல வகையில் அடர்சாம்பல் நிறத்திலும் காணப்படும். இவற்றின் பல்அமைப்பானது 42 பற்களைக் கொண்டது. கீழ்புறமாக 22 மேல்புறமாக 20 என்ற கணக்கில் அமைந்திருக்கும். 

    காவலுக்கு ஏற்ற வகையில் கரடுமுரடான தோற்றத்தையும் உடலமைப்பையும் கொண்டிருக்கும் இந்த வகை நாய்கள் மிகவும் அன்புடன் பழக்கூடியவை. வீட்டிற்கு வெளியே புலியாய்த் திரிந்தாலும் வீட்டிற்குள் குழந்தை போல சாதுவாய் மாறிவிடும். அன்போடும் அரவணைப்போடும் ஒரு பாதுகாவலனை வளர்க்க விரும்புவர்கள் நிச்சயமாக டாபர்மேன் வகையினைத் தேர்ந்தெடுக்கலாம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....