Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசிகிச்சைப் பெற்று வந்த யானை; திடீரென உயிரிழந்த சோகம்...

    சிகிச்சைப் பெற்று வந்த யானை; திடீரென உயிரிழந்த சோகம்…

    கோவை மாவட்டத்தில் சுற்றித்திரிந்த யானை ஒன்று உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அந்த யானை உயிரிழந்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் புகுந்த பெண் யானை ஒன்று விவசாய நிலத்தில் சுற்றித்  திரிந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். 

    இதையடுத்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் ஆதிமாதையனூர் கிராமத்திற்கு வந்து யானையை கண்காணித்தனர். அப்போதுதான், தெரிந்தது யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளது.

    இந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை வரவழைத்து அதன் உதவியோடு  காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    இதன் பின்பு உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்த 15 வயதுமிக்க அந்த பெண் காட்டு யானை டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் வனத்துறை யானைகள் பயிற்சி மையத்திற்கு கடந்த 17-ம் தேதி இரவு கொண்டு வரப்பட்டது. அங்கு கிரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, இரண்டு தினங்களாக அதற்கு வன கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்று வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.        

    தனுஷின் அதிக வசூல் படமாக மாறியதா வாத்தி? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....