Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல்லில் இன்று டபுள் தாமாக்கா: மும்பைக்கு முதல் வெற்றி கிடைக்குமா ?

    ஐபிஎல்லில் இன்று டபுள் தாமாக்கா: மும்பைக்கு முதல் வெற்றி கிடைக்குமா ?

    ஐபிஎல் தொடரில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று இரண்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. மாலை 3.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதிக்கொள்கின்றன. 

    முதல் ஆட்டம் பிரபார்ன் மைதானத்திலும், இரண்டாவது ஆட்டம் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்திலும் நடக்க இருக்கிறது. 

    குஜராத் டைட்டன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

    குஜராத் அணியை பொறுத்தவரை அந்த அணி நல்ல ஃபார்மில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 7ல் வெற்றியும் கண்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித் கான் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். ரஷித் கான் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அந்த அணியின் சுப்மன் கில் ஃபார்முக்கு வந்த அந்த அணி இன்னும் வலிமையாக மாறும். 

    ராயல் சேலஞ்சர்ஸ் அணியைப் பொறுத்தவரை பவுலிங்கில் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது. பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் அவர்களையே பெரிதும் நம்பி உள்ளனர். அவர் சறுக்கிய போட்டிகளில் மொத்த அணியும் சறுக்கி உள்ளது. அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி ஃபார்மின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் பேட்டிங்கில் அடித்தால், பெங்களூரு பட்டாசு வெடிக்கும். 

    ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் 

    இந்த ஆட்டம் மும்பை அணிக்கு மிகவும் சவாலான மற்றும் முக்கியமான ஆட்டம் ஆகும். இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய காட்டாயத்தில் உள்ளது மும்பை அணி. அந்த அணியின் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பொல்லார்டு, இஷான் கிஷன் ஆகியோர் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தாததால் தான் அந்த அணி இந்த நிலையில் உள்ளது. அவர்கள் அடிக்கும் பட்சத்தில் மும்பை, தெம்பாக வெளியேறும். 

    ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டங்களை வைத்து பார்க்கும்போது, அதிமிதமான ஃபார்மில் உள்ளது. பட்லர் பேயாட்டம் ஆட, யுவேந்திர சகல் மாயஜாலம் காட்ட அந்த அணி மிகவும் வலிமையாக உள்ளது. இதனை எப்படி மும்பை சமாளிக்க போகிறது என்று இன்று இரவு பார்க்கலாம்.

    கடும் கோடையை சமாளிக்க சருமத்தை இப்படி முறையாக பராமரித்து பாருங்கள்; அசந்துபோவீர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....