Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு : தாக்குதலின் பரபர நிமிடங்கள்!

    அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு : தாக்குதலின் பரபர நிமிடங்கள்!

    நியூயார்க் நகர போலீசார் ஒரு மனிதரைத் தேட தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளது. அந்த நபருக்கு பர்சன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர். 62 வயது மதிக்கத்தக்க அந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் புரூக்ளின் ரயில் நிலையத்தின் 36வது தெரு பிளாட்பார்மில் இருந்த பொதுமக்கள் கடுமையாக காயமடைந்தனர். ஆனால், அது அவர்தானா என்று சரியாக தெரியவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் கூறியுள்ளனர். 

    பர்சன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இவர், 62 வயது மதிப்புள்ள ப்ரான்ங் ஆர் ஜேம்ஸ் ஆவார். இவர் சம்பவத்தன்று ஆரஞ்சு நிறத்தில் மேலாடையும், அதன் உள்ளே சாம்பல் நிறத்தில் பனியனும் அணிந்திருந்திருக்கிறார். ஒரு வேன் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார். அந்த வண்டியின் சாவி சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இவர்தான் குற்றவாளி என்று உறுதியாகவில்லை. 

    குற்றவாளி கேஸ்(gas) உட்புக முடியா மாஸ்க் ஒன்றை அணித்திருக்கிறான். உள்ளே நுழைந்த அவன், இரண்டு புகை குண்டுகளைத் தூக்கிப் போட்டுள்ளான். இதனால் புகை முழவதுமாக பரவி, அங்கு இருந்தவர்கள் யாரும் எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின்பு அவன் புகைக்குள் கடுமையாகவும், சாராமரியாகவும் கண்மூடித்தனமாகவும் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். 

    காயம் பட்டவர்களில் 10 பேர் குண்டடி பட்டதாலும், 13 பேர் தப்பிக்க முயன்ற கூட்ட நெரிசலில் சிக்கியும், மேலும் சிலர் புகையினால் ஏற்பட்ட பாதிப்புகளாலும் காயமடைந்துள்ளனர். 

    இந்த தாக்குதல் நடந்த இடத்துக்கு விரைந்துச் சென்ற போலீசார், அந்த இடத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, மூன்று மெகசின்கள், பயன்படுத்தப்பட்ட புகைக்குண்டுகள் இரண்டு, பயன்படுத்தப்படாத புகை குண்டுகள் இரண்டு மற்றும் ஒரு கை கோடாரி ஆகியவற்றை சம்பவம் நேர்ந்த இடத்தில் இருந்து கண்டுபிடித்து  கைப்பற்றினர். 

    இதனைப்பற்றி கூறிய அந்நகர போலீசார், இந்த தாக்குதலுக்குப் பின்னால் எந்த தீவிரவாத அமைப்பும் இருப்பதைப் போல தெரியவில்லை. ஆனால், இதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதனை இயல்பான வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் செயலாகவே பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். 

    இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், பயந்து ஓடாமல் தங்களுடைய சக பயணிகளுக்கு உதவிய மற்ற பயணிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 

    இந்த சம்பவம் ஜோ பைடன் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய மறுநாளே நடந்துள்ளது. அவர் தன்னுடைய அறிக்கையில் வீட்டிலேயே தயாரிக்கும் எளிதில் அடையாளம் காண முடியாத கோஸ்ட் துப்பாக்கிகள் மீது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....