Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாகூர் கந்தூரி விழா! உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    நாகூர் கந்தூரி விழா! உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-ஆம் ஆண்டு கந்தூரி விழா இன்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  

    இந்த கந்தூரி விழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இதற்காக வாழை மரங்களும் தோரணங்களும், வண்ண வண்ண விளக்குகள் கொண்டும் அப்பகுதி முழுவதும் அலங்கரிப்பட்டுள்ளது. 

    இதனிடையே, ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சந்தனக் கூடு, ஊர்வலம் நடைபெற உள்ளது. அதன்பின்னர், ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் திருவிழாவும் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். 

    பதுக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம்; அதிரடியில் இறங்கிய காவல்துறை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....