Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇழந்ததை அடையுமா குஜராத் டைட்டன்ஸ்? - ஐபிஎல் பார்வை

    இழந்ததை அடையுமா குஜராத் டைட்டன்ஸ்? – ஐபிஎல் பார்வை

    15 ஆவது ஐபிஎல் தொடரில் இன்று 40 ஆவது போட்டி நடைபெற உள்ளது. இத்தொடரில் இன்னும் மீதம் 30 போட்டிகளே உள்ளன. இந்த நாற்பதாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கடந்தப் போட்டியில் வெற்றிப்பெற்ற விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அபாரமாக விளையாடிவருகிறது.

    நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிப் பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிவிட்டது. முதலிடத்தில் இருந்த குஜராத் ஒரு படி இறங்கிவிட்டது. இன்று நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றிப் பெற்று விட்டதை கைப்பற்றும் நோக்கில் குஜராத் அணி இன்று விளையாடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அதேப்போல், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முன்னேறுதலை குறிவைத்தே நகரும் என்பதில் ஐயப்பாடு இல்லை. இதற்கு முன்பு இரு அணிகளும் மோதியதில் ஹைதராபாத் அணியிடத்தில் குஜராத் அணி தோல்வியைத் தழுவியது. இன்று குஜராத் அணி இதற்கு பதிலடி தரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்தப் போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    கடந்த ஐந்து போட்டிகளில், இம்மைதானத்தில் அதிக ரன் மழை பொழிந்த வண்ணம் உள்ளன. இன்றும் அப்படியான ஒன்றைத்தான் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

    இதையும் படிங்க மக்களே; கோலியின் தொடர் சொதப்பல் ; வீழும் பெங்களூர்! – புள்ளிப்பட்டியலில் நேர்ந்த மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....