Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா18 வயதே நிரம்பிய தமிழ்நாட்டு டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்; போட்டிக்குச் சென்றபோது நடந்த...

    18 வயதே நிரம்பிய தமிழ்நாட்டு டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்; போட்டிக்குச் சென்றபோது நடந்த சோகம்!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 18வயது இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன். இவர் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் சென்று கொண்டிருக்கும் போது நடந்த சாலைவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். போட்டிக்காக டாக்சியில் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து நடந்ததாக இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளம் கூறியுள்ளது. 

    விபத்து நடந்த பொழுது 3 சக விளையாட்டு வீரர்களுடன் விஷ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் திங்கட்கிழமை நடைபெற இருந்த 83வது தேசிய மற்றும் மாநிலங்களுடையேயான சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அவரோடு சேர்ந்து பயணித்த சக வீரர்களான ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீனிவாசன் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் கடும் காயங்களுடன் உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி தப்பித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

    உமிலி செக்போஸ்ட்டைத் தாண்டி, சங்பங்லா பகுதி அருகே சாலையின் எதிரே வந்து கொண்டிருந்த 12 சக்கரங்கள் கொண்ட சரக்கு லாரி, நடுவே இருந்த சாலைத்தடுப்பை மீறி கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அருகில் உள்ள வடகிழக்கு பகுதிகளுக்கான இந்திரா காந்தி மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு விஷ்வா தீனதயாளன் அழைத்து செல்லப்பட்டு உள்ளார். ஆனால், அதற்குள் அவரது உயிர் அவரை விட்டு பிரிந்துள்ளது.

    மற்ற மூன்று பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த விஷ்வா தீனதயாளன் தேசிய அளவில் பல பட்டங்களையும், உலக அளவில் பல பதக்கங்களையும் வென்று இருந்தார். வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் நடைபெற இருந்த இளம் வீரர்களுக்கான உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் விஷ்வா தீனதயாளன் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில்தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

    விஷ்வா தீனதயாளன் புகழ்பெற்ற பயிற்சியாளர்களான ராம் பிரசாத் மற்றும் ஜெய் பிரபு ராம் ஆகியோரால் நடத்தப்படும் கிருஷ்ணசாமி டேபிள் டென்னிஸ் மையத்தின் மாணவர் ஆவார். 

    ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் ரி பொய் மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பெரும் கனவுகளோடு வாழ்க்கையில் முன்னேறி கொண்டிருந்த இந்த இளம் வீரரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நான் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மேகாலயா முதல்வர் கொர்நாட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார். 

    விஷ்வா தீனதயாளன் மரணத்திற்கு தமிழக முதல்வர் உட்பட அனைத்து கட்சித்தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்று தமிழக சட்டப்பேரவையில் விஷ்வா தீனதயாளனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....