Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்

    மாணவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 7 ஆம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

    தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, மே 7 ஆம் தேதி நீர் தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுத்தும் மாணவர்களை பாதிக்கும் என கருதி பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக, தேர்வு முடிவுகளை வேறு தேதியில் அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 

    இந்நிலையில், இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், மே மாதம் 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது எனவும், திட்டமிட்டபடி மே மாதம் 5 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மாணவர்களின் மனம் நலம் பாதிக்கப்படும் என்பதால், நீட் தேர்வுக்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். 

    மேலும், மே மாதம் 7 ஆம் தேதி மாலை அல்லது மே மாதம் 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், முதல்வருடன் இதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

    நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களுக்கு நிதியுதவி – உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....