Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய வினாத்தாள் கொண்டு நடைபெறும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு!

    புதிய வினாத்தாள் கொண்டு நடைபெறும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு!

    12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் சென்ற மாதம் கசிந்தது. அதற்கான தேர்வு புதிய வினாத்தாள் கொண்டு இன்று நடைபெறுகிறது.

    கொரோனா தொற்று குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாரக வேண்டும் என்று திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

    10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம்  நடைபெற்றது. அப்போது 12 ஆம் வகுப்பின் கணித பாட தேர்வின் போது வினாத்தாள் கசிந்தது. இதையடுத்து வினாத்தாள் எங்கு கசிந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வந்தவாசி சுற்றியுள்ள தனியார் பள்ளிகளின் மூலம் வினாத்தாள்கள் கசிந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

    இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2- ஆம் கட்ட திருப்புதல் தேர்வு இரண்டு வினாத்தாள்கள் கொண்டு நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஒன்று கசிந்தால் இரண்டாவது வினாத்தாளை வைத்து தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித பாட திருப்புதல் தேர்விற்கான எ மற்றும் பி கணித வினாத்தாள்கள் இரண்டும் சமூக வலைதளங்களில் முன்னரே வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று புதிய வினாத்தாள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது. 

    அடுத்தடுத்து கசிந்த கணித பாட வினாத்தாள்களால் பள்ளிக் கல்வித்துறை  அலுவகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யா மொழி, இது போன்று வினாத்தாள்கள் கசியும் சமயங்களில் பிளான்  எ மற்றும் பிளான் பி முறையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இதனை அடுத்து கட்டாயமாக திருப்புதல் தேர்வு பிளான் பி கொண்டு நடைபெறும் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....